Saturday 20 August 2022

 மினி பட்ஜெட்டில் ஒரு நாள் சுற்றுலா 

 














































 நடுக்கடலில் குளிக்கும் அனுபவம்

காரைக்குடி-  காரைக்குடியிலிருந்து 7:35 மணிக்கு  தொண்டி  செல்லும் பேருந்தில் காலையிலேயே கிளம்பினோம். மூன்று பேருக்கு 135 ரூபாய் டிக்கெட். அங்கிருந்து பேருந்து செல்லும்போது தேவகோட்டையில் 5 நிமிடம், திருவாடனை 5 நிமிடம்  நின்று வாகனம் சென்றாலும் 9.10 மணிக்கெல்லாம் காலையில் தொண்டியை  ( லெ.சொக்கலிங்கம் ) சென்று அடைந்தோம். 

                               காரைக்குடியில் இருந்து செல்லும் வழியிலேயே தொண்டி அடைந்த உடன் தொண்டியில் பள்ளிவாசல் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம். பள்ளிவாசல் நிறுத்தத்தின் அருகில் உள்ள பிஸ்மி ஹோட்டலில் காலை உணவை சாப்பிட்டோ ம். 

டக்காஸ் அல்வா கடை :

                    அதற்கு அருகிலேயே உள்ள டக்காஸ் அல்வா கடையில்  நெய் அல்வா சுட,சுட வாங்கி சாப்பிட்டோம்.இந்த கடையில் கருப்பட்டி அல்வா,மஸ்கொத் அல்வா,தேங்காய்ப்பால் அல்வா அனைத்துமே அருமையாக உள்ளது. அல்வாவிற்கு பெயர் பெற்ற கடை என்று நண்பர் ஜேம்ஸ் அவர்கள் தெரிவித்திருந்தார் . அது உண்மைதான்.

சிறப்பான டீ :

               பிறகு அங்கு டீயும்  நன்றாக போட்டார்கள். டீ யானது வெறும் தண்ணீரை ஊற்றி தேநீர் ஊற்றி அதில் சில இஞ்சி  தோல்களைப் போட்டு கொடுத்தார்கள். அதுவும் அருமையாக இருந்தது. டீ சாப்பிட்டுவிட்டு அருகே இருந்த பேருந்து   ( லெ.சொக்கலிங்கம் ) நிறுத்தத்திற்கு சென்றோம்.

மணக்குடி வழியாக காரங்காடு அடைதல் :

                                         பள்ளிவாசல்  பேருந்து நிறுத்தத்தில் மணக்குடி செல்லும் பேருந்தில் ஏறினோம். நாங்கள் ஏறிய பேருந்து ஏர்வாடி செல்லும் பேருந்தில் ஏறி மணக்குடி நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம். 

                  தொண்டியிலிருந்து சோழியக்குடி, புதுப்பட்டினம் அதற்கு அடுத்த நிறுத்தம் மணக்குடி ஆகும். 15 ரூபாய்தான் டிக்கெட். இறங்கியவுடன் ஆட்டோக்கள் அதிகமாக நிற்கின்றது. 

அலையாத்தி காடுகளை பார்த்தல் :

                        ஒரு ஆட்டோவை எடுத்துக்கொண்டு   ( லெ.சொக்கலிங்கம் ) நேராக காரங்காடு சென்றோம். ஆட்டோவிற்கு 50 ரூபாய். காரங்காட்டில்  என்ன சிறப்பு என்றால் அலையாத்திக் காடுகள் அதிகமாக இருக்கின்றது. மாங்குரோவ் காடுகளின் அடர்த்தியையும், மரங்களையும் அங்கு நாங்கள் பார்ப்பதற்காக சென்றோம். 

45 நிமிட போட் பயணம் :

                          காலை 10:50 யைப் போல் காரங்காடு சென்று அடைந்தோம். அங்கே சில ஆட்கள் சேரவேண்டும் என்பதற்காக காத்திருந்தனர். சுமார் 12 பேர் சேர்ந்தவுடன் படகில் எங்களை அழைத்துச் சென்றனர். 45 நிமிடம் படகு போட்டிங்  செல்லக்கூடும் என்று தெரிவித்தார்கள்.

டிக்கெட் விலை சற்று அதிகம் :

                     ஒருவர்க்கு 200 ரூபாய் டிக்கெட். கடலில் மிக அருமையான பயணம். அலையாத்திக் காடுகளும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. 

                  எங்களை   ( லெ.சொக்கலிங்கம் ) அழைத்துச் சென்ற தாவித் என்பவர் பல்வேறு தகவல்களை எங்களுக்கு தெரிவித்தார். மூன்று ஆள் உயரம் உள்ள கடலின் நடுவே நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று எங்களிடம் தெரிவித்தார்.

நடுக்கடலில் குளிக்கலாம் :

                         கடலில் காற்றும் அதிகமில்லை, அலையும் அதிகமில்லை .முந்தின நாள் இரவு நல்ல மழை பெய்ததால் இதுபோன்று ஒரு சூழ்நிலை இருப்பதாக எங்களிடம் தாவுத்  தெரிவித்தார். பிறகு குளிப்பதற்கு தயாராக இருக்கிறீர்களா ?  என்றால் இடுப்பளவு தண்ணீரில் இறக்கி விடுகிறோம். , குளியுங்கள்  என்று ஓர் இடத்தைக் கொண்டு போய் காண்பித்தார்கள். 

                        அலையாத்தி காடுகளின் நடுவே நடுக்கடலில் நாம் குளிப்பது போன்று உணர்வு  எங்களுக்கு இருந்தது. ஆனால் நாங்கள் குளிக்கவில்லை. எங்களுடன் வந்திருந்த மற்ற இரண்டு குடும்பத்தினரும் அதற்கு தயாராக இல்லை. 

குளிக்கதிற்கு முன்பே ஆயத்தம் ஆகுதல் :

                       குளிக்க வேண்டுமென்றால் , படகு கிளம்பும் இடத்துக்கு முன்பாகவே , அரை கால் ட்ரவுசர் அணிந்து கொண்டு சென்று இருந்தால் , குளித்து விட்டு அப்படியே வந்தால் துணி இயல்பாக காய்ந்து இருக்கும். எங்களுக்கு அப்போது தோணவில்லை.இதனை படித்து விட்டு செல்பவர்கள் அவசியம் குளிக்க செல்லும்போது இது போன்று செல்லுங்கள்.குளிப்பது அருமையாக இருக்கும் என்று ஜேம்ஸ் அவர்கள் கூறினார்.

 

நடுக்கடலில் போட்டோ எடுக்கலாம் :

                           எனவே அந்த இடத்தை மட்டும் கண்களால் பார்த்து விட்டு அங்கிருந்து நேராக சிறிது தூரத்தில் முழங்காலளவு   ( லெ.சொக்கலிங்கம் ) தண்ணீரில் போட்டோ எடுக்கலாம் என்று கூறினார். அதுவும் கடலின் உள்ளே எங்களை இறக்கி விட்டார்கள். 

                  அந்த இடத்தில் நாங்கள் இறங்கி ஒரு 15 நிமிடத்திற்கு மேல் போட்டோக்கள் எடுத்து விட்டு கிளம்பினோம்.பிறகு எங்களை மறுபடியும் அலையாத்தி காடுகளின் வழியாக அழைத்துச் சென்று மீண்டும் அலையாத்தி காடுகளின் வழியாக எங்களை கிளம்பிய இடத்திற்கே கொண்டுவந்து சேர்த்தனர்.

அருமையான லெமன் டீ :

                         முந்தின நாளே நாம் தகவல் கொடுத்துவிட்டால் நல்ல கடல் உணவுடன் சாப்பாடு கிடைக்கும் என்கிற தகவலையும் தாவித் அவர்கள் எங்களிடம் தெரிவித்தார். மேலும் அங்கே லெமன் டீ சாப்பிட்டோம். மிக அருமையாக இருந்தது. இஞ்சி புதினா எல்லாம் போட்டு நல்ல முறையில் லெமன் டீ கொடுத்தார்கள். அங்கேயே விலையும் நியாயமாக தான் இருந்தது . 

சர்ச் தரிசனம் :

                      பிறகு டேவிட் என்கிற   ஆசிரியர் பயிற்றுனர் அவர்களை அந்த ஊரிலேயே வசிப்பவரை  சந்தித்தோம். அவர் எங்களை அருகில் உள்ள சர்ச்சிற்கு அழைத்துச் சென்றார். 1884 இல் கட்டப்பட்ட அந்த சர்ச்சை நாங்கள் நன்றாக உள்ளே சென்று இறைவனை தரிசித்து பிறகு அங்கேயே சில நிமிடங்கள் இருந்து விட்டு,  நாங்கள் சென்ற ஆட்டோ எண்ணை  மீண்டும் அழைத்து மணக்குடி  சென்று அடைந்தோம். 

 

கடல் அலை இல்லாத படகு பயணம் :

                      இந்த கடல் பயணம் எங்களுக்கு மிகவும் புதுமையானதாக இருந்தது.  நாங்கள் ஏற்கனவே கல்கத்தாவில் அலையாத்தி காடுகளுக்கு சென்று இருக்கின்றோம். இருந்தபோதிலும் நம்மூரில் கடலின் நடுவில் அலையே இல்லாமல் மிகத்தெளிவாக மிகச் சிறப்பான முறையில் எங்களை இந்த படகு பயணத்தில் அழைத்துச் சென்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

நண்டு பிடிக்கும் தொழில் :

                                    காரங்காட்டில் சுமார் 150 படகுகள் உள்ளது என்றும்,அனைத்துமே நண்டு பிடிப்பதுதான் ,அங்கிருந்து சில கிலோமீட்டர் சென்றால் புதுப்பட்டினம் வரும் என்றும் ECR சாலையை பிடித்து விடலாம் என்று தெரிவித்தார்கள்.

பயணத்தை கலகலப்பாக்கிய 5 வயது சிறுவன் :

                        எங்களுடன் வந்திருந்த  பயணிகளில் ஒரு இளம் 5 வயது பையனும் வந்திருந்த.  அவரை நீங்கள் குளிக்கலாம் என்று படகு ஓட்டுனர் கூறியவுடன் சோப்பு ஷாம்பு எடுத்து வரவில்லை என்று எங்களிடம் வருத்தப்பட்டு பேசியது எங்களுக்கு மிகுந்த புதியதாக இருந்தது. மேலும் அந்த இளம் வயது பையன் மிகவும் அருமையாக இந்த பயணத்தை என்ஜாய் செய்து எங்களோட அழகாக பேசிக்கொண்டே வந்தார். அவருடைய மழலைப் பேச்சு எங்களை மிகவும் ஈர்த்தது.

 

வெயில் உகந்த விஞாயகர் தரிசனம் :

                          மீண்டும் நாங்கள் காரங்காட்டில்  இருந்து ஆட்டோ மூலமாக மணக்குடி அடைந்தோம். ஆட்டோ கட்டணம் அதே 50 ரூபாய் தான். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள உப்பூரை அடைந்தோம் . உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயத்தை சென்று தரிசித்தோம்.  

                            வெயிலுகந்த விநாயகர் காலை 6 மணியிலிருந்து 12 மணி வரை திறந்திருக்கும். மீண்டும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவித்தார்கள். 

                     தேவகோட்டை ஜமீன்தார் அவர்களின் நகர விடுதி ஒன்றும் அங்கே அமைந்துள்ளது, அதனையும் சென்று பார்வையிட்டு, பிறகு   எம் எஸ் உணவகத்தில்  ( ரோட்டில் இருந்து பார்க்கும்போது சுட,சுட மீன் பொரித்து கொடுக்கின்றனர்) மீன் சாப்பாடு உண்ணலாம் என்று சென்றோம்.

உப்பூர் எம்.எஸ்.மீன் உணவகம் :

                           காலையில் டக்காஸ்  அல்வா சாப்பிட்டது எங்களுக்கு பசி அதிகம் இல்லை. எனவே மீன்  மட்டும் தருகிறீர்களா என்று கேட்டுப் பார்த்தோம். அவர்களோ இல்லை மீன் தரமுடியாது,  மீன் சாப்பாடு தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்று தெரிவித்து விட்டார்கள். 

                          பிறகு சுமார் ஒரு மணி நேரம் உப்பூரில் காத்திருந்து பேருந்து ஏறி மீண்டும் தொண்டியை சுமார் 35 நிமிடத்தில்   அடைந்தோம்.

தொண்டியில் மீன் உணவு :

                            தொண்டி பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வான்மதி மெஸ்ஸில் மீன் சாப்பாடு சாப்பிட்டோம். நேரமாகிவிட்டதால் பசியோடு  ( லெ.சொக்கலிங்கம் )   இருந்ததால் அங்கு சாப்பாடும் நல்ல முறையில் இருந்தது. அங்கேயே மீன் மற்றும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு ஒருவரை சந்திப்பதற்காக சென்றோம்.

திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபடுதல் :

                                  பார்த்தசாரதி என்கிற நண்பரை சந்தித்து இருசக்கர  வாகனம் பெற்றுக்கொண்டு தொண்டியில் இருந்து கிளம்பி சோழியக்குடி, புதுபட்டினம் வழியாக வீர சாலியமங்கலம் என்கிற இடத்தில் வளைவில்  ( லெ.சொக்கலிங்கம் )    திரும்பி  திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலை அடைந்தோம். தொண்டியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம்தான்.

                                        அங்கு அம்பாளையும், வால்மீகி நாதர் இறைவனையும் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஐந்தரை மணிக்கு தொண்டியை  வந்தடைந்தோம்.

 

ஹார்பர் செல்லுதல் :

                             தொண்டியில்  டக்காஸ்  டீக்கடையில் மீண்டும் அல்வாவும், தேனீரும் சாப்பிட்டோம்.  நல்ல மழை வேறு பெய்து கொண்டிருந்தது.  அந்த நேரத்தில் டீ கடையில்  ( லெ.சொக்கலிங்கம் )   ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும்  தொண்டி ஹார்பர்  வரை சென்று பார்வையிட்டோம். 

குழந்தைகள் விரும்பும் அழகப்பா பல்கலைக்கழக வளாகம் :

                           அருகே உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் கடல்சார்  ஆராய்ச்சி மையத்தை சென்று பார்வையிட்டோம். மிக அருமையான வளாகம். நல்ல முறையில் இளம் குழந்தைகள்,மாணவர்கள் விளையாடும் வகையில் அமைந்திருந்தது.

மீண்டும் காரைக்குடியை அடைதல் :

                           அந்த கல்லூரியில் (கடலை ஒட்டி அமைந்திருந்த அந்த பார்க்கிங்கில்) சிறிது நேரம் நடந்து விட்டு, பிறகு அங்கிருந்து நாங்கள் மாலை 7. 40 மணி அளவில் கோயம்புத்தூர் வரும் காரைக்குடி   ( லெ.சொக்கலிங்கம் ) பேருந்தில் ஏறி 9.10 மணிக்கெல்லாம் காரைக்குடி அடைந்தோம்.

மினி பட்ஜெட் :

                       இந்த பயணத்தில் பேருந்து செலவாக தொண்டியில் இருந்து மணக்குடிக்கு 15 ரூபாயும், உப்பூரில் இருந்து தொண்டிக்கு  15 ரூபாயும் மட்டும் தான் ஆனது. மீண்டும் தொண்டியில் இருந்து காரைக்குடிக்கு பேருந்தில் மூன்று பேருக்கும் சேர்த்து 135 ரூபாய் தான் ஆனது. 

                              எனவே மிகவும் குறைவான  பட்ஜெட்டில் சில கோயில்களையும்,  கடற்பகுதியில் போட்டிங்கையும்  நன்றாக சுற்றிவிட்டு  வருவதற்கு மிக அருமையான பயணமாக  அமைந்தது. 

நன்றிகள் பல :

                      இந்தப் பயணத்தில் எங்களுக்கு   ( லெ.சொக்கலிங்கம் ) பல்வேறு விதமான தகவல்களை தெரிவித்த ,  ராமநாதபுரம் ஆசிரியர் பயிற்றுனர் நாகராஜன், காரங்காடு ஆசிரியப் பயிற்றுநர் டேவிட், தேவகோட்டை தே பிரித்தோ தமிழ் ஆசிரியர் ஈசாக் உட்பட பல நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மினி பட்ஜெட்டில் வேறு என்ன,என்ன இடங்கள் பார்க்கலாம் ?

                மினி பட்ஜெட்டில் ஒருநாள் சுற்றுலா மிக அருமையாக சென்று வர நல்ல இடம் காரங்காடு போட்டிங்ககும். நீங்கள் மேலும் எங்கேயும் செல்ல வேண்டுமென்றால் திருவாடனை கோயிலுக்குச் செல்லலாம், தொண்டி அருகே உள்ள தேவிபட்டினம் சென்று வரலாம் ஒரு நாள் முதல் இரண்டு நாள் வரை அருமையான மினி பட்ஜெட் சுற்றுலா இதுவாகும்.  நன்றி நண்பர்களே.

 

லெ .சொக்கலிங்கம்,

காரைக்குடி.

 

வீடியோ : https://www.youtube.com/watch?v=jjTLLBwGRH0

 

 https://www.youtube.com/watch?v=rXhjuuQutBk


https://www.youtube.com/watch?v=qls0gne04-g

 

 

 

 

2 comments: