Saturday 13 August 2022

 முதன் முறையாக  அகில இந்திய  வானொலியில் பள்ளி மாணவி ஆர்.ஜெ வாக அசத்தல் 

குவியும் பாராட்டுக்கள் 

 எத்தனையோ ஆயிரம் பேர் ஒரு நிமிடம் வானொலியில் பேசி விடமாட்டோமா என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது, பல ஆயிரம் நேயர்கள் கேட்கும் வண்ணம் ஒரு மணி நேரம் முழுவதும் நிகழ்ச்சியை நெறிப்படுத்தியது என்னை மேலும் தன்னம்மைபிக்கை உடையவளாக மாற்றி உள்ளது - மாணவி திவ்யஸ்ரீ 




 

மதுரை - ஆக - அகில இந்திய மதுரை வானொலியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஆர்.ஜெ வாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் அசத்தினார்.

                                                          அகில இந்திய மதுரை வானொலி நிலையத்திற்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி திவ்ய ஸ்ரீயை நிகழ்ச்சி ஆர்.ஜெ வாக செயல்பட தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வானொலி நிலையத்தருடன் பேசி தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றார்.மதுரை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைவர் தாராதேவி, ஒலிபரப்பு பொறுப்பாளர்கள் ஜேக்கப் ஜெப ரூபன் , புகழ் மாரிமுத்து ஆகியோர் மாணவியை  வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர். கண்ணாடி மாளிகை என்கிற நிகழ்ச்சியை மாணவி ஒரு மணி நேரம் முழுவதும் நேரலையில் நேயர்களுடன் தொலைபேசி வழியாக பேசி நெறிப்படுத்தினார்.அகில இந்திய மதுரை வானொலியில் மாணவர்கள் ஆர்.ஜெ.வாக செயல்படும் இந்நிகழ்வில் முதல் மாணவியாக திவ்ய ஸ்ரீ பங்கேற்று தேர்ந்த ஆர்.ஜெ.வாக சிறப்பான  முறையில் நேயர்களுடன் பேசி ஒருங்கிணைத்தது பாராட்டுக்குரியது என நிகழ்ச்சி  தலைவர் தாரா தேவி வாழ்த்து தெரிவித்து மாணவிக்கு புத்தகம் பரிசாக வழங்கினார். முதன் முறையாக பள்ளி மாணவி நெறியாளராக செயல்பட்டதற்கு வானொலி நிலையத்தில் உள்ள அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.ஒலிப்பதிவில் உறுதுணையாக நெறியாளர்கள்  ரோஸி,விக்னேஸ்வரி  உடனிருந்தார். மாணவிக்கு பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி பயிற்சி அளித்திருந்தார். எட்டாம் வகுப்பு மாணவி நெறியாளராக வானொலியில் ஒரு மணி நேரம் முழுவதும் நேயர்களை ஒருங்கிணைத்தது பாராட்டுக்குரியது என நேயர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

                     இது குறித்து மாணவி திவ்யஸ்ரீ பேசும்போது, இளம் வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அகில இந்திய வானொலியில் மாணவ பருவத்தில் முதல் ஆர்.ஜெ.வாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.நேரலையில் அன்பான நேயர்களுடன் பேசியது எனது வாழ்வில் மறக்க முடியாதது. நிகழ்ச்சி முடிந்த உடன் வானொலி நிலைய பொறுப்பாளர்கள் நேயர்கள் பேசும்போது இயல்பாக , நேயர்கள் பேசியதை உள்வாங்கி நன்றாக பேசினாய் , அருமை என்று பாராட்டியபோது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகவும் கிராம பகுதியில் இருந்து வந்துள்ள என்னை இது போன்று வானொலி நிலையத்தில் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்ததற்கு எங்கள் பள்ளிக்கு நன்றி கூறி கொள்கிறேன்.  எத்தனையோ ஆயிரம் பேர் ஒரு நிமிடம் வானொலியில் பேசி விடமாட்டோமா என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது, பல ஆயிரம் நேயர்கள் கேட்கும் வண்ணம் ஒரு மணி நேரம் முழுவதும் நிகழ்ச்சியை நெறிப்படுத்தியது என்னை மேலும் தன்னம்மைபிக்கை உடையவளாக மாற்றி உள்ளது.வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தலைவர் தாரா தேவி மற்றும் ஜாக்கப் ஜெப ரூபன் ஆகியோருக்கும் நன்றி கூறி கொள்கிறேன் என்று பேசினார்.

பட விளக்கம் : அகில இந்திய மதுரை வானொலியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி திவ்ய ஸ்ரீ ஆர்.ஜெ வாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் அசத்தினார்.நிகழ்ச்சி  தலைவர் தாரா தேவி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=o4vry7OMxog





 

 

 

 

No comments:

Post a Comment