Thursday 15 July 2021

  காமராசர் கல்வி வளர்ச்சி நாள் 

 

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிருங்கள் - என அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள் - தேவகோட்டை டி.எஸ்.பி.பேச்சு 






 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வு  நடைபெற்றது.

     ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை டி.எஸ்.பி.ரமேஷ் நிகழ்விற்கு  தலைமை தாங்கி பேசுகையில், காமராஜர் எத்தனையோ தலைமுறை தாண்டியும் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு உள்ளார்.கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் . அவர் ஏற்படுத்தி கொடுத்த கல்வி கூடங்கள்   அனைவருக்கும் உபயோகமாக உள்ளது.விட்டு கொடுக்கும் மனப்பான்மை உடையவர். பொதுமக்கள் அனைவரும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிருங்கள் என்று பேசினார்.காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் தொடர்பாக இணைய வழியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசின் நெறிமுறைகளை , சமூக இடைவெளியை பின்பற்றி  பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.


 பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்   நிகழ்வில்  தேவகோட்டை டி.எஸ்.பி. ரமேஷ் தலைமை தாங்கி  இணைய வழி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

 

வீடியோ 

https://www.youtube.com/watch?v=KSH1sL2-RfI


https://www.youtube.com/watch?v=eqpiHZLBGPs


                                                
 

No comments:

Post a Comment