Tuesday 13 July 2021

மொபைல்  வீடியோ மூலம் பேசி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

 கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது - அனைவரும் போட்டு கொள்ளுங்கள் 

 வருமுன் காப்பதே சிறந்தது - வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் 

 


 

தேவகோட்டை -  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், போன் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு பள்ளி மாணவர்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மாணவர்கள்  வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்  பொதுமக்களை  போன் மூலம் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது, அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுகையில்,  எங்கள் பள்ளி மாணவர்கள் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்கள் பெற்றோரிடமும் , பொதுமக்களிடமும் இணையம் வழியாக வீடியோவாக பேசி அனைவருக்கும்  வாட்சப் வழியாக அனுப்பி வருகிறார்கள். அவசியம் அனைவரும் கை கழுவ வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், குறிப்பிட்ட சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற தகவல்களை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.என்றார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்  பொதுமக்களை  போன் மூலம் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது, அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

STAY HOME , STAY SAFE என்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள வீடியோக்கள்
 https://www.youtube.com/watch?v=dCZdqr0FzJA
 
 https://www.youtube.com/watch?v=DCgkzbPb8Eo
 
 https://www.youtube.com/watch?v=1hblDJMvAIc
 
 
 

No comments:

Post a Comment