Sunday 25 July 2021

கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை மாணவர்களின் வீடுகளில் சென்று  ஒட்டிய ஆசிரியர்கள் 

 







 
தேவகோட்டை - கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை.  தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.எனினும் சில வீடுகளில் குடும்ப சூழ்நிலையின் காரணமாக குழந்தைகள், தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்துவதை அறியாத நிலை உள்ளது.
                                   இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்   தங்களது பள்ளிக்கூடத்தில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவிடும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்வி தொலைக்காட்சி பார்க்கும் வண்ணம் மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை எடுத்து கூறினார்கள்.கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி அருகே ஆசிரியர்களே ஓட்டினார்கள் .கல்வி தொலைக்காட்சியில் வகுப்பு வாரியாக பாடங்கள் ஒளிபரப்பு செய்வதை மாணவர்கள் தவறாது பார்த்து பயில வேண்டும் என்றும் விளக்கி கூறினர்.
மாணவர்கள் கல்வி பயில விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வை பொதுமக்கள் பாராட்டினார்.கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் பாடங்கள் படிப்பதை வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர்.
 
 

 

படவிளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வி   தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் பயிற்சி பாடங்களை ஆர்வத்துடன் படிக்க கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி அருகே ஆசிரியர்களே நேரில் சென்று ஓட்டினார்கள் .

 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment