Monday 26 July 2021

 தற்பெருமை பேசாதவர் அப்துல்கலாம் 

உயர்ந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டானவர் அப்துல்கலாம் 

நீதிபதி புகழாரம் 

அப்துல்கலாம் நினைவு தினம் 












தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தேவகோட்டை சார்பு  நீதிமன்ற நீதிபதி மரக்கன்றுகளை நாட்டார்.இணையம் வழியாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
                                                   ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசுகையில் , அப்துல் காலம் எளிமையானவர் .பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.இளைஞர்களை,மாணவர்களை பெரிதும் கவர்ந்தவர்.உலகத்திற்கே விடிவெள்ளியாக திகழ்ந்தவர்.ஏழ்மை குடும்பத்தில் பிறந்து மிக உயர்ந்த இடத்திற்கு சென்றவர்.தற்பெருமை பேசாதவர்.பணம் பிரதானம் என்று இல்லாதவர்.விஞ்ஞானம் மனித குலத்திற்கு மேம்பாடு அடைய உதவ வேண்டுமென அரும்பாடு பட்டவர்.அவரது ஆறாவது நினைவு நிகழ்வில் பங்கேற்றதை பெருமையாக எண்ணுகிறேன் என்று பேசினார்.இணையம் வழியாக அப்துல்கலாமின் கவிதை,பொன்மொழிகள் கூறியவர்களுக்கும் ,அப்துல்கலாம் ஓவியம் வரைந்தவர்களுக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு நாள் நிகழ்வில் தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி முருகன் தலைமை தாங்கி இணையம் வழியாக நடைபெற்ற அப்துல்கலாம் பொன்மொழிகள் கூறுதல் , ஓவியம் வரைதல் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி செடிகளை நட்டு வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .

வீடியோ 

https://www.youtube.com/watch?v=8qEyEFKMiRg


https://www.youtube.com/watch?v=Y5jBoEESmTY


No comments:

Post a Comment