Saturday 10 July 2021

 உலக மக்கள் தொகை தினம் - இணையம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள் 






































தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு   உலக மக்கள் தொகை  தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும்பேச்சு  போட்டிகள் இணையம் வழியாக நடைபெற்றது.
 
           கொரோனா காலமாக இருப்பதால் மாணவர்களுக்கு இணையம் வழியாக   உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் , முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வ மீனாள்  ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க வைத்தனர். மாணவர்கள் 1989-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது என்கிற தகவலை கூறி , உலக மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுகளை வீடியோவாகவும்,  ஓவியங்கள் வரைந்தும்  அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
 
 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக ஓவியம் மற்றும் பேச்சு  போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துமீனாள், செல்வமீனாள் ,  முத்துலட்சுமி ஆகியோர் இணையம் வழியாக தகவல்களை கூறி அதிக அளவில் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்தனர்.
 
 வீடியோ : 

https://www.youtube.com/watch?v=3lcXG5NHGcM
 
https://www.youtube.com/watch?v=7XpboRGSfaQ





No comments:

Post a Comment