Monday 2 September 2019

 நாடகம் மூலம் நன்னெறி கல்வி 

வாயால் நல்ல வார்த்தை பேசுவேன்

கைகளால் பிறருக்கு உதவி செய்வேன்

உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் 

 










தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கல்வியோடு நற்பண்புகளையும் கற்றுத்தரும் நாடகங்கள் நடித்து காண்பிக்கப்பட்டது.

                                           ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நாடக ஆசிரியர் செல்வம் மாணவர்களுக்கு நாடகம் மூலம் நற்பண்புகளை விளக்கி நடித்து காண்பித்தார்.கால்களால் நல்ல பாதையில் நடப்பேன்,வாயால் நல்ல வார்த்தை பேசுவேன்,கைகளால் பிறருக்கு உதவி செய்வேன்,கண்களால் நல்லதையே பார்ப்பேன்,காதுகளால் நல்லதயே கேட்பேன் என்று கூறி மாணவர்களை நாடகம் நடிக்க வைத்து ,உறுதிமொழி சொல்ல சொன்னார்.உண்மையாக இருக்கவே வேண்டும்,எந்த செயலாக இருந்தாலும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்,யாராவது கீழே விழுந்தால் பார்த்துக்கொண்டு போகக்கூடாது ,உதவி செய்யவேண்டும் போன்ற விஷயங்கள் நாடகம் மூலம் வலியுறுத்தப்பட்டது.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நாடக ஆசிரியர் செல்வம் நாடகம் மூலம் நன்னெறி கதைகளை நடித்து காண்பித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

 

 

No comments:

Post a Comment