Wednesday 18 September 2019

 நேர்மை மாணவியை தேடி வந்த பரிசு 







நேர்மை மாணவிக்கு தபாலில் வந்த பரிசு 

சமுதாய நோக்கம் நிறைந்த மாணவிக்கு திசைகள் அமைப்பு பாராட்டு 

  தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவர் ஆ.மகாலெட்சுமி .பள்ளிக்கு காலையில் வந்த உடன் பள்ளி வளாகத்தில் கீழே   ரூபாய் 100 கிடந்துள்ளது.அதனை பார்த்த மகாலெட்சுமி வகுப்பு ஆசிரியையிடம் கொடுத்துள்ளார்.மிக கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் ,பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று வரும் நிலையிலும்,பணத்தை பார்த்த உடன் தனக்கு வைத்துக் கொள்ளாமல் நல்ல எண்ணத்துடன்,நேர்மையுடன் பணத்தை எடுத்து கொடுத்த மாணவியை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.இந்த தகவலை இணையத்தில் பார்த்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பினர் மாணவியை பாராட்டி தபால் மூலம் பரிசு அனுப்பினார்கள்.பரிசினை பள்ளி தலைமை ஆசிரியர்  சமுதாய நோக்கம் நிறைந்த நேர்மை மாணவிக்கு வழங்கினார்.நேர்மை மாணவியின் செய்தியை கேள்விப்பட்ட உடன் பரிசு அனுப்பிய திசைகள் அமைப்புக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.  


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கீழே கிடந்த பணத்தை வகுப்பு ஆசிரியரிடம் எடுத்து கொடுத்த நேர்மை மாணவியை பாராட்டி அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பினர் பரிசு பொருளை பள்ளிக்கே அனுப்பி வைத்தனர்.பரிசினை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் சமுதாய நோக்கம் நிறைந்த நேர்மை மாணவி மகாலெட்சுமிக்கு வழங்கினார்.நேர்மை மாணவியின் செய்தியை கேள்விப்பட்ட உடன் பரிசு அனுப்பிய திசைகள் அமைப்புக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment