Saturday 28 September 2019

மேகமலை போறீங்களா ?  உஷார் !

இயற்கை அழகு குவிந்துள்ள மேக மலை :










                                     தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் சின்னமனுர் அருகே உள்ளது மேகமலை.அதிகம் சுற்றுசூழல் பாதிப்பு இல்லாத , இயற்கை கொஞ்சும் மலை அழகுடன் உள்ளது மேகமலை.மேகமலை செல்லும் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) வழியில் அதிகமான இயற்கை காட்சிகளை ரசித்து கொண்டே கொண்டை  ஊசி வளைவுகளில் சென்றால் முதலில் நம்மை வரவேற்பது தனியார் தேயிலை தோட்டங்கள் தான்.சுமார் 30 நிமிடத்தில் நாம் சின்னமனுரில் இருந்து மேகமலை சென்று விடலாம்.காலையில் 7 மணிக்கு கிளம்பினால் இயற்கையை ரசித்து கொண்டே மேலே செல்வதற்கு சுமார் ஒரு மணி நேரம் எடுத்து கொள்ளலாம்.

 பேச்சியம்மாள் உணவகம் :
 
                                8 மணிக்கெல்லாம் மேகமலையை தொட்ட உடன் நம்மை வரவேற்பது பேச்சியம்மாள் உணவகம்.காலையில் சுட,சுட இட்லி ,கமகமக்கும் சாம்பாருடன் டிபனை  சாப்பிடலாம். காலை குளிருக்கு அருமையான உணவு.மதியம் என்ன உணவு வேண்டும் என்பதை அப்போதே சொல்லி சென்று விடலாம்.அசைவ,சைவ உணவு இரண்டுமே ஆர்டர் கொடுக்கலாம்.
                                         நாங்கள் சின்னமனுரில் முதல் நாள் இரவு சென்று தங்கி கொண்டு மறுநாள் காலை பேருந்து வழியாக மேகமலை சென்றோம்.( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) . காலையில் முதலில் பேச்சியம்மாள் உணவகத்தில் இட்லி,தோசை சாப்பிட்டு விட்டு,சூடாக தேனீரும் அருந்தி சுற்றி பார்க்க கிளம்பினோம்.

ஜீப் மூலம் மட்டுமே செல்லலாம் :
                                                   மேகமலை  ஹைவேவிஸ் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகம் ( அரசு சார்ந்த தங்கும் விடுதிகள் உள்ளன ) அருகே எங்களுக்கு ஒரு டாடா சுமோ தயாரக இருந்ததது.( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) .நாம் செல்லும் வண்டியில் அதற்கு மேல் முடியாது.ஏனெனில் முற்றிலும் சாலை வசதி இல்லாத இடம்.பாறைகள் மட்டுமே உள்ளன. குழியுமான ரோடுகள் அதிகம்.அப்பகுதி முழுவதுமே தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.அவர்கள் நினைத்தால்தான் சாலை வசதி செய்ய இயலும்..ஆனால் அவர்களோ செய்ய தயாராக இல்லை.பொதுமக்கள் வருவதை அவர்கள் விரும்பவில்லை என்று எங்களை அழைத்து சென்ற வாகன ஒட்டி தெரிவித்தார்.
                                                               நாங்கள் காலை 9.15 மணி அளவில் சுமோவில் கிளம்பினோம்.நாம் வண்டியை நிறுத்தி விட்டு இது போன்று உள்ள ஜீப்புகளில் மட்டுமே  செய்ய முடியும்.நாங்கள் வாடகைக்கு எடுத்த சுமோவில்   கிளம்பி ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) முதலில் பார்த்தது வட்டப்பாறை செல்லும் ஆரம்ப இடம் ( இதன் உள்ளே அனுமதி இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை ). ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட சுண்ணாம்பு,கல் ஆகியவற்றால் ஆன ஆற்று பாலத்தை பார்த்துவிட்டு அதன் வழியாக மகாராஜா மெட்டு நோக்கி சென்றோம்.செல்லும் வழியில் இரவலாறு டேம் பார்த்தோம்.அதன் வழியாக நீண்ட தூரம் அழகான தேயிலை தோட்டங்களை  சென்றோம்.சீனா டீ இலைகள் வடிவத்திலும்,அழகாக நேர்த்தியாக ,அருமையாக டீ இலைகள் பயிரிட பட்டு இருந்தது.பார்க்கவே அழகாக இருந்தது.அதனை ரசித்துக்கொண்டே சென்றோம்.ஆங்காங்கே ,பல போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.அருமையான அனுபவம்.ஆனால் எங்கள் ஓட்டுனரோ,எங்களை நேரம் ஆகிறது என்று விரட்டி கொண்டே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஜா மெட்டு :
                                               பிறகு நிறைவாக மகாராஜா மெட்டு பகுதிக்கு மேலே சென்றோம்.அங்குஇருந்து அய்யப்பன் கோவில் தெரியும் என்று  ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) சொன்னார்கள் ? எங்களுக்கு தெரியவில்லை.ஆனால் அங்குஇருந்து நாம் பார்க்கும்போது கம்பம் பகுதி முழுவதும் அருமையாக தெரிந்தது.நல்ல குளு ,குளு இடம்.தரைமட்டத்தில் இருந்து சுமார் 6900 அடி இருக்கும் என்று கூறினார்கள்.பிறகு வனப்பகுதிக்குள் நடந்து சிறிது தூரம் சென்றோம்.எங்களது வாகன ஓட்டுனரோ சீக்கிரம்,சீக்கிரம் என்று விரட்டி கொண்டே இருந்தார். நிறைவாக நாங்களும் அங்கு இருந்து கிளம்பினோம்.

தேயிலை மரங்கள் :
 
                                      வருகிற வழியில் பல இடங்களை பார்த்தோம்.அதில் குறிப்பாக தேயிலை புதியதாக பயிர் செய்யும் வகையில் எல்லா இடங்களிலும் சுண்ணாம்பு தடவி ஆங்காங்கே பயிர் செய்து வைத்து இருந்தனர்.அப்போதுதான் பாசி பிடிக்காமல் இருக்கும் என்றும்,மழைக்கு பல காலம் தாங்கும் என்றும் சொன்னார்கள்.தேயிலை தோட்டங்களில் பல்வேறு படங்கள் எடுத்துக்கொண்டோம். தேயிலை செடி மட்டுமே பார்த்து உள்ள நமக்கு , தேயிலை மரங்கள் மிகப்பெரிய அளவில் வளர்த்து பார்வைக்கு விட்டு உள்ளனர்.

டீ தூள் தயாரிக்கும் ஆலை :
 
                                             தேயிலை தோட்டங்களை பார்த்துக்கொண்டே தேனீர் தயாரிக்கும் ஆலைக்கு சென்றோம்.ஆலையில் தேனீர் எவ்வாறு தயாரிக்கின்றனர் என்று தெளிவாக சொன்னார்கள்.முன்பு இருந்ததை விட அதிக அளவில் மெஷின்கள் வந்ததால் தற்போது ஆட்கள் எண்ணிக்கை குறைத்து விட்டனர் என்று சொன்னார்கள்.தேயிலை அழகாக வண்ணமிட்ட டப்பாக்களில் வண்ணத்தோடு மேட்ச் ஆகும் வகையில் சென்சார் உதவியோடு உள்ளே மெஷின்கள் தள்ளுகிறது.அதனை பார்க்கவே நச் என்று  உள்ளது . பிறகு ஆலையின் ஒவ்வொரு பகுதியாக சென்று தெளிவாக மோகன் என்பவர் விளக்கினார்.மிக எளிதாக மெஷின்கள் வழியாக டீ தூள் தயாரிக்கப்படுகிறது.


சுமாரான டீ  தூள்தான் நமக்கு :

                    நமக்கு வரும் டீ தூள் நான்காவது பிரிவு என்றும்,மிகவும் சுமாரானது என்றும் கூறினார்கள்.இருப்பதில் நல்ல தரமான டீ  தூள் கொச்சின் அனுப்பப்பட்டு அங்குஇருந்து வெளிநாடுகளுக்கு செல்வதாக தெரிவித்தனர்.நிறைவாக நாம் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தால் எங்களது வாகன ஓட்டுநர் மீண்டும் லேட்டாகி விட்டது,உடனே கிளம்புங்கள் என்று விரட்ட ஆரம்பித்து விட்டார்.பிறகு அங்குஇருந்து விடைபெற்று மீண்டும் பேச்சியம்மாள் கடைக்கு மதியம் 12.15 மணிக்கு வந்தோம்.நங்கள் ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) டீ தூள் தயாரிக்கும் ஆலைக்கு செல்ல வேண்டும் என்று கூறியபோது ,அது வேஸ்ட் நீங்கள் போகவேண்டாம் என்று எங்களது ஓட்டுனர் சொன்னார்.நாங்கள் அதையும் தாண்டி சென்றது எங்களுக்கு டீ  தூள் தயாரிப்பு தொடர்பான அருமையான விவரங்கள் கிடைக்கப்பெற்றோம்.


மனதை தொட்ட மழை  : 
 
                                                  பேச்சியம்மாள் கடையில் மதிய உணவை சுட,சுட ஆம்லேட்டுடன் சாப்பிட்டு விட்டு மதியம் 1 மணி முதல் 3.15 மணி வரை பேருந்துக்கு காத்து நின்றோம்.சுமார் இரண்டு மணி முதல் சரியான மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.பேருந்து நிறுத்தம் அருகில் ஒதுங்க இடம் இல்லாமல் அருகே இருந்த சிறிய அம்மன் கோவில் வாசலில் ஒதுங்கி நின்றோம்.எங்கள் நேரம்,அங்கேயும் அதிகமான ஆட்கள் ஒதுங்கினார்கள் .அங்குதான் எங்களுக்கு ,நாம் மேகமலையில் ஏமாற்றபடுகிறோம் என்கிற விவரம் தெரிய வந்தது.

எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறோம் ? உஷார்
                                              
                                                             மழைக்கு ஒதுங்கி நின்றபோது , எங்கள் அருகில் நின்ற ஒருவரை , எங்களுக்கு வண்டி மற்றும் ரூம் பிடித்து கொடுத்த ஒருவர் வந்து பேசி சென்றார்.அப்போது அவரிடம்,நாங்கள் பேச்சு கொடுத்தோம்.சார்,இவர் உங்களுக்கு ரூம் பிடித்து கொடுத்ததில் ரூபாய் 500 கமிஷன் சார் .அந்த தொகையை உங்கள் கணக்கில் சேர்த்து ரூம் விடுபவர்கள் பெற்று விடுவார்கள். மேலும் உங்களுக்கு வண்டி பிடித்து கொடுத்ததில் சுமார் 300 ரூபாய் அவருக்கு கமிஷன் சார்.எல்லாமே இங்கு கமிஷன் தான் என்றார்.சுற்றுலாவாசிகள் எவ்வாறெல்லாம் ஏமாற்ற படுகிறீர்கள் என்று நொந்து கொண்டார்.நாங்கள் தங்கியிருந்த அறையோ சின்னமனுரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தள்ளி இருந்தது.எங்களுக்கு அப்போதுதான் , புரிந்தது நாம் ஏன் இவ்வாறு இங்கு வந்து தங்க வைக்கப்பட்டோம் என்பது விளங்கியது.
                           இயற்கை அழகு நிறைந்த இடம்.ஆனால் ஏமாற்றுபவர்கள் அதிகம் உள்ள இடம்.மேகமலை செல்பவர்கள் ? உஷார் மக்களே.

மேகம் தொட்டு விடும் தூரம்தான் : 
 
                                                 மீண்டும் நாங்கள் மழையுடன் ,மேகங்கள் நமக்கு மேலே அழகாக கையால் தொட்டுவிடும் தூரத்தில் செல்லும் அழகை பார்த்துக்கொண்டே ( சூப்பர் கிளைமேட் ) மாலை 3.15 மணி அளவில் பேருந்தில் ஏறி ,4.00 மணிக்கு கீழே வந்து விட்டோம்.பேருந்து பயணம் அருமை.பிறகு அங்குஇருந்து எங்களது ரூம் இருக்கும் பகுதியிலிருந்து ஷேர் ஆட்டோ பிடித்து ,பேருந்து மூலம் எங்கள் ஊர் வந்து சேர்ந்தோம்.அன்புடன் லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி.

                             

No comments:

Post a Comment