Sunday 15 September 2019

விண்வெளி ஆராய்ச்சி கலந்துரையாடல் 

புத்தகம் தொடர்ந்து படித்தால் வெற்றி உறுதி 

விடா முயற்சி இருந்தால் தடைகளை தாண்டி வெற்றி பெறமுடியும் 

போலந்து நாட்டில் விண்வெளி பயிற்சியாளரின் தன்னம்பிக்கை பயிற்சி

அறிவின் உச்சமே அறிவியல் - நீதிபதி பேச்சு 










தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போலந்து நாட்டில் பயிற்சி பெற்றவருடன் விண்வெளி ஆராய்ச்சி கலந்துரையாடல் நடைபெற்றது.
                                                     தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.தேவகோட்டை நீதித்துறை நடுவர் மகாராஜா , தேனி எழுத்தாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.,தேவகோட்டை நீதிமன்றத்தின் சார்பு  நீதிபதி முருகன் தலைமை தாங்கி பேசுகையில், அறிவின் உச்சமே அறிவியல் . தாய்,தந்தையரை எப்போதுமே வணங்குங்கள்.ஆசிரியர்கள்தான் அறிவை கற்று கொடுப்பவர்கள்.மாணவர்களாகிய நீங்கள் சந்தேகங்களை மனதுக்குள் வைத்துக்கொள்ளாமல் வாய் விட்டு கேட்டால் தெளிவு பிறக்கும்.என்று பேசினார்.உக்ரைன் நாட்டில் விண்வெளி பொறியியல் கல்வி நான்கு ஆண்டுகள் படித்து , போலந்து நாட்டில் விண்வெளி பயிற்சி பெற்றுள்ள உதய கீர்த்திகா பேசுகையில், எனது ஊர் தேனி ஆகும்.நான் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில்தான் பயின்றேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம்தான். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே விண்வெளி வீராங்கனையாக வரவேண்டும் இலக்கு நிர்ணயித்து கொண்டேன்.அதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டது.பொருளாதார ரீதியாக, சரியான வழிகாட்டுதல் இல்லாமல் சிரமப்பட்டேன்.ஆனால் விண்வெளி வீராங்கனை ஆகவேண்டும் என்கிற ஆசை  மட்டும் என்னுள் தீயாக கொழுந்து விட்டு எரிந்தது.அதனால்தான் பல தடைகளை தாண்டி ,உக்ரைன் நாட்டில் சென்று நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டு விண்வெளி பொறியியல் படிப்பை படித்தேன்.கடந்த வாரம் போலந்து நாட்டுக்கு சென்று இதயம் நிற்கும் அளவுக்கு கடினமானதும் , காது கிழிவும் அளவுக்கு சிரமமானதுமான 10 விதமான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இந்தியா திரும்பி உள்ளேன்.என்னால் முடிந்தது போல் உங்களாலும் பல தடைகளை தாண்டி உங்கள் இலக்கை அடைய முடியும்.நான் இந்தியாவுக்காக விண்வெளி வீராங்கனையாக செல்வதுதான் எனது குறிக்கோள் ஆகும் ,அதனை அடைந்து தீருவேன் என்று உணர்ச்சி பொங்க தன்னம்பிக்கை தரும் விதத்தில் பேசினார்.மாணவர்கள் அய்யப்பன்,நதியா,கீர்த்தியா,சிரேகா ,ஜோயல்,அஜய் பிரகாஷ் ஆகியோர் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர். நிகழ்வில் சார்பு நீதிமன்றங்களின் சிராசுதாரர் பாலசுப்ரமணியன் உட்பட ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போலந்து நாட்டில் விண்வெளி வீரர் பயிற்சி பெற்ற உதய கீர்த்திகாவுடன் பள்ளி மாணவர்கள் விண்வெளி ஆராய்ச்சி கலந்துரையாடல் நடைபெற்றது.தேவகோட்டை நீதிமன்றத்தின் சார்பு நீதிபதி முருகன் தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , நீதித்துறை நடுவர் மகாராஜா ,தேனி எழுத்தாளர் தாமோதரன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.





 

No comments:

Post a Comment