Friday 26 July 2019

 அப்துல் காலம் நினைவு தினம்

கலாம் கனவை நினைவாக்குங்கள் 
மரம் வளர்த்து மழை பெறுங்கள்
  அரசு தோட்டக்கலை அலுவலர் பேச்சு 








தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
                                                   ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கல்லல் அரசு தோட்டக்கலை அலுவலர் தர்மர் மாணவர்களிடம் பேசுகையில், அப்துல் காலம் எளிமையானவர் .பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.அவரது பத்து கட்டளைகளுள் ஒன்றுதான் மரம் வளர்த்து மழைபெறுங்கள் என்பதாகும்.எனவே,நீங்கள் அனைவரும் அதிக அளவில் மரங்களை வளர்த்து மழை பெற முயற்சிப்போம்.என்று பேசினார்.பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் நதியா,கீர்த்தியா,ஜனஸ்ரீ ,ஜோயல் ரொனால்ட்,சபரி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.மாணவர்கள் அப்துல்கலாம் படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு நாள் நிகழ்வில் கல்லல் அரசு தோட்டக்கலை அலுவலர் தர்மர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி செடிகளை நட்டு வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.





No comments:

Post a Comment