Monday 22 July 2019

 சந்திரயான்-2 விண்கலம் வெற்றிக்கு  செயற்கைகோள் வடிவமைத்து  பள்ளி மாணவர்கள் பாராட்டு

உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம் அனுப்பிய இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு 

ரூபாய் 1000 கோடி மதிப்பில் உருவான சந்திரயான்-2 விண்கலம்
 
பெண்கள் திட்ட இயக்குனராக செயல்பட்டு வெற்றிகரமாக செலுத்திய விண்கலம் என்பது கூடுதல் சிறப்பு 











 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 
சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு செயற்கைகோள் வடிவமைத்து   மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                              சந்திரயான்-2 விண்கலம்  ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது .  3 ஆயிரத்து 290 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இடம் பெற்றுள்ள லேண்டர் கருவிக்கு விக்ரம் என்றும் ரோவர் கருவிக்கு பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக லேண்டர், நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும். விண்கலத்தில் உள்ள நவீன முப்பரிமாண கேமராக்கள் தேவையான படங்களை எடுத்து அனுப்ப இருக்கின்றன. யாருமே (எந்த நாடுகளும்) போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான்-2 செல்வது அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது.
பெண்கள் திட்ட இயக்குனராக செயல்பட்டு வெற்றிகரமாக செலுத்திய விண்கலம்என்பது கூடுதல் சிறப்பு என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.விடா முயற்சியுடன் இந்த சாதனையை வெற்றி பெற செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.முன்னதாக காலை வழிபாட்டு கூட்டத்திலும் சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் செல்ல வேண்டி மாணவர்கள் பிரார்த்தனை நடைபெற்றது.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு   செயற்கைகோள் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment