Wednesday 26 October 2022

  எல்.வி.எம்.3 - எம்2 ராக்கெட் வெற்றிக்கு 

பள்ளி மாணவர்கள் பாராட்டு







தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  எல்.வி.எம்.3 - எம்2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                                 இஸ்ரோவின் அதிக எடைகொண்ட ராக்கெட்டான எல்.வி.எம்.3 மூலம்  பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களை  விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 36 செயற்கைக்கோள்களுடன்  வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டிருப்பது  உலகளாவிய அளவில் இந்தியாவிற்கு ஒரு மைல்  கல்லாக இருக்கும் என்றும்,   வணிக ரீதியிலான  இந்தியாவின் வளர்ச்சிக்கு சர்வதேச அளவில் இது உதவும்   என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.வி.எம்.3 - எம்2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு   வண்ண பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வீடியோ : 
https://www.youtube.com/watch?v=tU6508y25m8

No comments:

Post a Comment