Monday 17 October 2022

 வாசிப்பை சுவாசிப்போம் 

புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத வீடு போன்றது 

சர்வதேச பயிற்சியாளர் பேச்சு 

புத்தகம் படித்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் 










தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வாசிப்பை சுவாசிப்போம் என்கிற புத்தகம் வாசித்தல் தொடர்பான புதிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தேவகோட்டை ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் இதயம் நிறுவனமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

                                            தேவகோட்டை  ரோட்டரி சங்க தலைவர் ஜோசப் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்னன் மற்றும் ரோட்டரி சங்க செயலர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி கிளப் துணை ஆளுநர் கணேசன் தலைமை தாங்கி புத்தக விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்.மதுரை நிகில் அறக்கட்டளை நிறுவனரும் , சர்வேதச மனிதவள பயிற்சியாளருமான நாகலிங்கம் மாணவர்களுக்கு பல்வேறு விதமான கதைகளின் மூலமாக வாசிப்பை சுவாசிப்போம் என்கிற தலைப்பில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நிகில் அறக்கட்டளை சி.இ ,ஓ.வெங்கடாச்சலம்  நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்னன், பெற்றோர்கள் அமலா,அமுதா உட்பட ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் நிறைவாக நன்றி கூறினார்.மாணவர்கள் பலரும் பல்வேறு விதமான புத்தக வாசிப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டதாகவும், இனி வரும்காலங்களில் அதிகமான புத்தகங்களை வாசித்து வாழ்க்கையில் மேம்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.சிறப்பாக பங்கேற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.



பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வாசிப்பை சுவாசிப்போம் என்கிற புத்தகம் வாசித்தல் தொடர்பான புதிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தேவகோட்டை ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் இதயம் நிறுவனமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.மதுரை நிகில் அறக்கட்டளை நிறுவனரும் , சர்வேதச மனிதவள பயிற்சியாளருமான நாகலிங்கம் மாணவர்களுக்கு பல்வேறு விதமான கதைகளின் மூலமாக வாசிப்பை சுவாசிப்போம் என்கிற தலைப்பில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=lwAi_YESw1o



No comments:

Post a Comment