Wednesday 19 October 2022

புத்தகம் வாசித்து  ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வென்று  அசத்திய மாணவர்கள்

நூல் வாசித்தல் பரிசு - புதிய முறையில் புத்தகம் படிக்க பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு 

  

வாசிப்பை சுவாசிப்போம் - புத்தகம் வாசிப்பு முகாம் 









தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்களை வாசித்து கருத்துக்களை வெளிப்படுத்திய  மாணவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.தேவகோட்டை ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் இதயம் நிறுவனமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

                                            தேவகோட்டை  ரோட்டரி சங்க தலைவர் ஜோசப் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.நிகில் அறக்கட்டளை முதன்மை அதிகாரி வெங்கடாசலம் மற்றும் அறங்காவலர் குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி கிளப் மாவட்ட துணை ஆளுநர் கணேசன் தலைமை தாங்கி புத்தக விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்.மதுரை நிகில் அறக்கட்டளை நிறுவனரும் , சர்வேதச மனிதவள பயிற்சியாளருமான நாகலிங்கம் மாணவர்களுக்கு பல்வேறு விதமான கதைகளின் மூலமாக வாசிப்பை சுவாசிப்போம் என்கிற தலைப்பில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா,முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.  ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் நிறைவாக நன்றி கூறினார்.மாணவர்கள் பலரும் பல்வேறு விதமான புத்தக வாசிப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டதாகவும், இனி வரும்காலங்களில் அதிகமான புத்தகங்களை வாசித்து வாழ்க்கையில் மேம்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.புத்தகங்கள் வழங்கி படிக்க கூறிய மாணவர்களில் சிறப்பாக தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி முதல் பரிசினை மாணவி திவ்யஸ்ரீயும், இரண்டாம் பரிசினை முத்தய்யன் , மூன்றாம் பரிசு சந்தோஷ்குமாரும்,நான்காம் பரிசு ஜெயஸ்ரீயும்,ஐந்தாம் பரிசினை யோகேஸ்வரனும் பெற்றனர்.


பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்களை வாசித்து கருத்துக்களை வெளிப்படுத்திய  மாணவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.தேவகோட்டை ரோட்டரி கிளப் மற்றும் விருதுநகர் இதயம் நிறுவனமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.மதுரை நிகில் அறக்கட்டளை நிறுவனரும் , சர்வேதச மனிதவள பயிற்சியாளருமான நாகலிங்கம் மாணவர்களுக்கு பல்வேறு விதமான கதைகளின் மூலமாக வாசிப்பை சுவாசிப்போம் என்கிற தலைப்பில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=8nFyYaAGVb8


https://www.youtube.com/watch?v=aXag5JSzqSU


No comments:

Post a Comment