Thursday 7 March 2019

 கல்லூரி படிப்பு முடித்த பிறகுதான் பல்கலைக்கழகம் பற்றி தெரியும் - துணைவேந்தர் உதவியால் 6வது படிக்கும்போதே எங்கள் பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று உள்ளனர் - நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த துணைவேந்தர் அவர்களுக்கு நன்றி - தலைமை ஆசிரியர் கருத்து 

 பல்கலைக்கழகத்திற்கு களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

வரலாறுகளை அறிந்து கொண்டு பாதுகாக்க வேண்டும் 

துணைவேந்தர் மாணவர்களுடன் கலந்துரையாடல் 














காரைக்குடி-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம்  சென்றனர்.
                                       தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் காரைக்குடி  அழகப்பா   பல்கலைக்கழகத்துக்கு     
 களப்பயணமாக சென்று தமிழர் பண்பாட்டு மையம் ,அழகப்பர் அருங்காட்சியகம்,வரலாறு துறையில் இந்திய மற்றும் உலக வரைபடம் எவ்வாறு எளிதாக குறிப்பது,நவீன முறையில் செயல்படும் நூலகம்,அறிவியல் வளாகத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர் . பல்கலைக்கழக வளாகத்தில்  துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.கலைப்புலம் முதன்மையர்   முனைவர் முருகன் பல்கலைக்கழகத்தில் சுற்றி பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.அறிவியல் வளாகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிவியல் புலம் முதன்மையர் முனைவர் சங்கரநாராயணன் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் விளக்கினார்.பள்ளி ஆசிரியர்கள் கருப்பையா,செல்வமீனாள் ஆகியோர் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.    
6,7,8 படிக்கும் கிராமப்பகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் உள்ள  இளம்வயது மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று அறிந்துகொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


பட விளக்கம் :காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம்  சென்றனர்.






மேலும் விரிவாக : 

வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் - மாணவி காயத்ரி 

வள்ளல் அழகப்பர் போல் அதிகமானோருக்கு உதவுவேன் - அழகப்பர் அருங்காட்சியகம் பார்த்து விட்டு மாணவி நித்யகல்யாணி பேச்சு 

பல்கலைக்கழகம் சென்றது தொடர்பாக மாணவர்களின் கருத்துக்கள் :

பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் :  
                                                              சமீபத்தில் எங்கள் பள்ளிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்றார்.அப்போது மாணவர்களை பல்கலைக்கழகம் அழைத்து வர சொல்லி சென்றார்கள்.அதன் தொடர்ச்சியாக துணைவேந்தர் ஏற்பாட்டில் எங்கள் பள்ளி மாணவர்கள் பல்கலைக்கழக வாகனத்தில் தேவகோட்டையில் கிளம்பி முதலில் பல்கலைக்கழகத்தின் வரலாறு துறையில் நவீன முறையில் இந்தியா மற்றும் உலக வரைபடம் வரைவது தொடர்பாக விளக்கினார்கள்.பல்கலைக்கழகம் சுற்றி பார்ப்பதற்கு கலைப்புலம் முதன்மையர் முனைவர் முருகன் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.பிறகு அழகப்பரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படங்கள்,தமிழர் பண்பாட்டு மையத்தின் பல்வேறு அருகாட்சியங்களை பார்வையிட்டு ஆச்சிரியமடைந்தனர் . பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் ராஜேந்திரன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் .பிறகு அங்கிருந்து நவீன முறையில் செயல்படும் நூலகம் சென்றோம்.அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல்வேறு நூலக பகுதிகளை பார்வையிட்டோம்.நவீன முறையில் புத்தகங்களை பதிவிட்டு வெளியில் கொண்டு செல்வது எப்படி என்பதை அறிந்துகொண்டோம்.பிறகு அறிவியல் வளாகத்துக்கு சென்று அறிவியல் புலம் முதன்மையர் சங்கர நாராயணன் தலைமையிலான குழுவினர் அறிவியலின் கூறுகளை மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக விளக்கினார்.ஆறாவது படிக்கும் மாணவர்கள் இளம் வயதில் பல்கலைக்கழகத்தை பார்ப்பதும்,துணைவேந்தர் அவர்களுடன் கலந்துரையாடுவதும் மாணவர்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு.நான் படிக்கும் காலத்தில் கல்லூரி படிப்பு முடித்த பின்புதான் பல்கலைக்கழகம் தொடர்பாக அறிந்து கொண்டேன்.என்னிடம் படிக்கும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பல்கலைக்கழத்துக்கு களப்பயணமாக வந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.வரும்காலத்தில் மிகப்பெரிய அளவில் மாணவர்கள் நோக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த களப்பயணம்  அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என்பது உண்மை.இதனை ஏற்படுத்தி கொடுத்த துணைவேந்தர் அவர்களுக்கும் ,அவர்களது குழுவினருக்கும் மிக்க நன்றி.








No comments:

Post a Comment