Monday 18 March 2019

அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் 

 உங்களை நீங்களே நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் 
தன்னம்பிக்கை  தானாக வளரும் 
  மனித வள பயிற்சியாளர் பேச்சு 







தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து புறம் ஐந்து  பயிற்சி முகாம் நடைபெற்றது.
 

                                           ஆசிரியை செல்வ மீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் சாம் சதிஷ்   வாங்க பாராட்டலாம் என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேசியதவாவது: நம்மை நாமே பாராட்டி கொள்ள வேண்டும்.மற்றவர்களை மனதார பாராட்ட வேண்டும்.நாம் தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் ஒரு நிமிடம் கண்களை மூடி கடவுள்,இயற்கை,அம்மா,அப்பா ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.கண்ணாடியில் நம்முடைய கண்களை பார்த்த பிறகு,நான் உன்னை நேசிக்கிறேன் என்று குறை வேண்டும்.நம்மை நாம் நேசிக்க வேண்டும்.அப்போதுதான் புத்துணர்ச்சி கிடைத்து அதன் மூலம் தன்னம்பிக்கை தானாக வளரும்.நாம் ஒரு செயலை சரியாக செய்த பிறகு நம்முடைய கையை மடக்கி முதுகில் வைத்து தட்டி பாராட்டி கொள்ள வேண்டும் என்று கூறி மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்  பயிற்சி அளித்தார் .மாணவர்கள் சபரி,சந்தியா,பாக்கியலட்சுமி,ராஜேஸ்வரி,அய்யப்பன்,நித்ய கல்யாணி ஆகியோர் வாங்க பாராட்டலாம் என்பது பற்றி தங்களின் கருத்துக்களை சொன்னார்கள்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையை சார்ந்த சாம் சதீஷ் என்கிற தலைப்பில் அகம் ஐந்து புறம் ஐந்து   பயிற்சி அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment