Saturday 2 March 2019

 மாற்றி யோசியுங்கள் - வாழ்க்கை வளமாகும் 
 மனிதவள பயிற்சியாளர் பேச்சு 

அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் 





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
 

                                           ஆசிரியை செல்வ மீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் மோகன ஹரிஷ் அகம் ஐந்து புறம் ஐந்து என்கிற தலைப்பில் மாற்றி யோசியுங்கள் என்ற தலைப்பில் விளையாட்டு முறையில் செயல்பாடுகள் செய்து மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் புரியும் வகையில் பயிற்சி அளித்தார் .மாணவர்கள் சந்தியா,ராஜேஸ்வரி,நித்யகல்யாணி,பாக்கியலட்சுமி,முத்தய்யன் ,காயத்ரி ஆகியோர் மாற்றி யோசித்தல்என்பது பற்றி தங்களின் கருத்துக்களை சொன்னார்கள்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையை சார்ந்த மோகன ஹரிஷ் மாற்றி யோசியுங்கள் என்கிற தலைப்பில் வாழ்வியல் திறன் பயிற்சி அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment