Tuesday 26 March 2019

மனசா புத்தியா பயிற்சி முகாம் 

 சுய சிந்தனையை வெளிப்படுத்தினால் வெற்றி  கிடைக்கும்
  வாழ்வியல்  பயிற்சியாளர் பேச்சு 
 



 


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மனசா புத்தியா   பயிற்சி முகாம் நடைபெற்றது.
 

                                           ஆசிரியை முத்து  மீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் ராஜு மனசா புத்தியா என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேசியதவாவது: மனசு என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும்.புத்தி என்பது சிந்தனையை வெளிப்படுத்தும்.நாம் ஜெயிப்பதற்கு புத்தியை பயன்படுத்த வேண்டும்.அதற்கு சிந்திக்க வேண்டும்.எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடாது.விளைவு ஆபத்தை ஏற்படுத்தும்.சுய சிந்தனையை வெளிப்படுத்தினால் வெற்றி கிடைக்கும் .நம்முடைய உணர்வுகளை கட்டுப்படுத்த சுய கட்டுப்பாடு,சுய விழிப்புணர்வு,உந்துதல்,உன்னிடத்தில் நான்,மனித உறவுகளை கையாளுதல் போன்ற குணநலன்கள் அவசியம் என்று கூறி மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்  பயிற்சி அளித்தார் .மாணவர்கள் சபரி,சந்தியா,பாக்கியலட்சுமி,ராஜேஸ்வரி,அய்யப்பன்,நித்ய கல்யாணி ஆகியோர் வாங்க பாராட்டலாம் என்பது பற்றி தங்களின் கருத்துக்களை சொன்னார்கள்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையை சார்ந்த ராஜு மனசா புத்தியா என்கிற தலைப்பில் வாழ்வியல் திறன் பயிற்சி   அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 
 
 
 
பின்குறிப்பு : அகம் ஐந்து,புறம் ஐந்து என்கிற பயிற்சியில் மொத்தம் பத்து தலைப்பில் இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ள  எட்டு தலைப்புகள் : அன்பு,பொறுப்புணர்ச்சி,நேர்மை,ஒத்துழைப்பு , உன்னிடத்தில் நான்,மாற்றி யோசி,கவனிக்கலாமா?, வாங்க பாராட்டலாம்,என்பது ஆகும்.தற்போது நடைபெற்றுள்ள மனசா புத்தியா ஒன்பதாவது  தலைப்பு ஆகும்.

No comments:

Post a Comment