Saturday 9 March 2019

ஆளுமை பயிற்சி முகாம் 

சாதனை செய்ய கவனம் அவசியம்
மூளைதான் நமது நண்பன் 
 ஆளுமை பயிற்சியாளர் பேச்சு 







தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆளுமை  பயிற்சி முகாம் நடைபெற்றது.
 

                                           ஆசிரியைமுத்து  மீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் அறக்கட்டளை பயிற்சியாளர் விஜயகுப்தா  கவனிக்கலாமா என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேசியதவாவது: கவனம் என்பது நமக்கு மிக முக்கியம்.எந்தவொரு செயலிலும் கவனம் இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். இரண்டு கூட்டல் இரண்டு எவ்வளவு என்று கேட்ட உடன் ,காதுகள் கேட்டு மூளைக்கு அனுப்பி,மூளை நான்கு என்று கூறும்படி வாயிடம் கூறுகிறது.எனவே மூளை தான் நமது முதல் நண்பன்.இரண்டு கூட்டல் இரண்டு என்ற உடன் உங்கள் காதுகள் கேட்கின்றதல்லவா அதுதான் கவனித்தல் ஆகும்.ஐம்புலன்கள் மூலமாக நடக்கும் செயல்கள் அனைத்தும் நம்முடைய மூளைக்கு சென்று பின் நடைபெறுகிறது.நடிப்பு,தடைகள்,அறிவு சாமர்த்தியம்,இணைத்தல்,திசை திருப்புதல்,அறிவுரை கூறுதல் என கவனச்சிதறல் ஆறு வகைப்படும்.இதனை சரியாக கையாண்டால் கவனம் நம்மிடம் அதிகமாகும்.என்று கூறி மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்  பயிற்சி அளித்தார் .மாணவர்கள் சந்தியா,ராஜேஸ்வரி,நித்யகல்யாணி,பாக்கியலட்சுமி,முத்தய்யன் ,காயத்ரி ஆகியோர் மாற்றி யோசித்தல்என்பது பற்றி தங்களின் கருத்துக்களை சொன்னார்கள்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையை சார்ந்த விஜய் குப்தா  என்கிற தலைப்பில் ஆளுமை  பயிற்சி அளித்தார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment