முயற்சியுடன் பயிற்சி இருந்தால் வளர்ச்சி தானாக வரும்
பென்சிலால்
அப்துல் கலாம் ஓவியம் வரைந்த அசத்திய மாணவர்கள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை
முன்னிட்டு ஓவியம்
மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.மாணவர்கள் பென்சிலால் அப்துல்கலாம் ஓவியத்தை வரைந்து அசத்தினார்கள்.
விழாவிற்கு வந்தவர்களை
பள்ளி ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை
வகித்தார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சேவியர் தலைமை
தாங்கி பேசுகையில் , அப்துல்கலாம் எளிமையானவர் . எளிமையான வாழ்க்கை வாழ்பவர்களால் மட்டுமே மிகப்பெரிய பதவிகளை அடையமுடியும்.அதனால்தான் நாம் இன்றும் அவரை நினைவோடு வைத்துள்ளோம்.உங்களது வாழ்க்கையில் முயற்சியுடன் பயிற்சி இருந்தால் வளர்ச்சி தானாக வரும்.அதற்கு ஒரு உதாரணமாக வாழந்தவர்தான் அப்துல்கலாம்..இவ்வாறு
பேசினார்.பேச்சு ,ஓவியம்,கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அஜய்,பிரிஜித்,திவ்யஸ்ரீ,ஜெயஸ்ரீ,நதியா,மகாலெட்சுமி,ஐயப்பன்,சஞ்சீவ்,
காயத்ரி ஆகியோர் பரிசுகள் பெற்றனர். நிகழ்வின் நிறைவாக
ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.மாணவர்கள் அப்துல்கலாம் படத்துக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
பட விளக்கம் : தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை
முன்னிட்டு ஓவியம்
மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை ஸ்ரீ
சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சேவியர் பரிசுகளை வழங்கினர்.உடன் பள்ளி
தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளார்.
No comments:
Post a Comment