Monday, 16 July 2018

 மகிழ்ச்சியில் மாணவர்கள் - தினகரன் 

 நாளிதழில் மாணவர்களின் படங்கள் 


மதிப்பிற்கும்,அன்புக்குறிய செய்தி ஆசிரியர் அவர்களுக்கு ,வணக்கம் 
                                    இன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியின் செய்தி வெளியாகி இருந்தது.மாணவர்களின் வண்ண படத்துடன் வெளியாகி உள்ளது.மிக்க நன்றி.அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்,சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் படங்கள் நாளிதழில் வெளியாகும்போது மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.மாணவர்களின் படங்களை வெளியிடும் அருமையான வாய்ப்பினை தினகரன் நாளிதழ் ஏற்படுத்தி உள்ளதற்கு மிகுந்த நன்றியை பள்ளியின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.சுமார் 40,50 ஆண்டுகள் கழித்து அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற இந்த மாணவர்கள் நாளிதழில் தங்களின் படங்களை வந்த காட்சிகளை பார்க்கும்போது பரவசப்படுவார்கள் என்பது உண்மை.இன்று வெளியான தினகரன் நாளிதழை படம் வெளியான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் சார்பில் வாங்கி கொடுத்தோம்.மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள் .மீண்டும் தினகரன் நாளிதழுக்கு நன்றிகள் பல.தங்களின் நாளிதழ் செய்திதான் எங்களை போன்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும்,ஊக்கத்தினையும் கொடுத்து வருகிறது.அதற்கும் மிக்க நன்றி.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment