அரசு செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க தேர்ச்சியாகி உள்ள மாணவருக்கு பள்ளியில் பாராட்டு
வட்டார அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பாராட்டு
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நற்பெயர் பெற்ற சிறந்த உண்டி உறைவிட பள்ளியில் படிக்கும் செலவை தமிழக அரசே ஏற்கிறது
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வட்டார அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தமிழக அரசின் செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க தேர்வாகி உள்ள மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அரசுப்பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் பழங்குடியினர் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ,மாணவியர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில் வட்டாரத்திற்கு ஒரு மாணவ,மாணவியரை 6ம் வகுப்பில் சேர்த்து 12 வகுப்புவரை பயில ஆகும் செலவினத்தை அரசே ஏற்கும். நன்றாக படிக்க கூடிய பள்ளிக்கு ஒரு மாணவர் தேர்வு செய்யப்பட்டு வட்டார அளவில் இதற்கான போட்டி தேர்வு வருடம்தோறும் நடைபெறும்.அதனில் தேர்வாகி முதல் மதிப்பெண் பெறும் மாணவ,மாணவியர் அரசின் செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க வைக்கப்படுவார்கள்.இந்த திட்டத்தின் கீழ் தேவகோட்டை வட்டார அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் கிஷோர்குமார் முதல் மதிப்பெண் பெற்று உண்டி - உறைவிட பள்ளியில் அரசின் செலவில் படிக்க உள்ளார்.மாணவர் கிஷோர்குமார் தேர்ச்சி பெற்றதை பாராட்டி பள்ளி செயலர் சோமசுந்தரம்,கல்வி குழு தலைவர் மீனாட்சி ஆகியோர் நல்லாடை அணிவித்து 500 ரூபாய் அன்பளிப்பு வழங்கி பரிசு பொருளும் கொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வட்டார அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தமிழக அரசின் செலவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்க தேர்வாகி உள்ள மாணவர் கிஷோர்குமாரை பள்ளி செயலர் சோமசுந்தரம் ,கல்வி குழு தலைவர் மீனாட்சி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.

No comments:
Post a Comment