பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியமான பேச்சு :
பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியமான பேச்சு :
பாராட்டப்பட வேண்டிய நடுநிலைப் பள்ளி மாணவியின் பேச்சு :
மிகப்பெரிய த .மு.எ க.ச.கலை இலக்கிய இரவு மேடையில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அதனில் பரிசு பெறுவதற்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள்.நடுநிலைப் பள்ளி அளவில் பரிசு பெற்ற ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி சிரேகா என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அத்துணை மாணவர்கள் மத்தியிலும் அங்கு பரிசு பெற்ற பள்ளிகளில் இருந்து வந்தவர்களில் ஒரே பெண் சிரேகா மட்டுமே என்பது பாராட்டத்தக்கது.
மேடையில் பரிசு பெற்றவர்களின் சார்பில் ஒரு மாணவர் ஏற்புரை வழங்குங்கள் என்று சொன்ன உடன் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி சிரேகா மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் எவ்வித தயக்கமும் இல்லாமல் தன்னம்பிகையுடன் ஏற்புரை வழங்கி ,நன்றாக பேசி நன்றி தெரிவித்தார்.மாணவியின் பேச்சு பார்வையாளர்களை கவர்ந்தது.
முதல் வகுப்பு மாணவியின் தைரியமான பாடல் :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் முதல் நிகழ்வாக முதல் வகுப்பு மாணவி முகல்யா காமராஜர் பற்றி தைரியமாக ,தன்னம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பாடல் பாடினார்.இந்நிகழ்வு பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது.
தேவகோட்டை த.மு.எ .க.ச.வின் கலை இலக்கிய இரவில் மிகப்பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளாக முதல் வகுப்பு மாணவி முகல்யா காமராசர் பற்றி பாடல்,மழை நீர் சேமித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் வில்லுப்பாட்டு , மாணவிகளின் ஒயிலாட்டம் , தொடக்க நிலை மாணவர்களின் கிராமிய நடனம் , மாநில அளவில் போட்டியில் தேர்வான மாணவி சிரேகா பரிசு பெற்று ஏற்புரை வழங்கி பேசுதல்
No comments:
Post a Comment