Wednesday 1 August 2018

 அறிவியல் விழா 

அறிவியல் கண்காட்சி

நடமாடும் அறிவியல் வாகனம் துவக்க விழா

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்.


                                            துவக்க விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குயின் எலிசபெத் அறிவியல் கண்காட்சி மற்றும் இலவச நடமாடும் அறிவியல் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் ,பள்ளத்தூர் அ .மு.மு.அறக்கட்டளை செயலர் ராஜகோபால் , முதன்மை செயலர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அகஸ்தியா அறக்கட்டளை பொறுப்பாளர்கள் பலராம் , மோகன்தாஸ்,முத்துச்செல்வன்,அய்யப்பசாமி , அரங்குலவன் ஆகியோர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.அறிவியல் கண்காட்சியை பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ,சேவுகன் அண்ணாமலை பள்ளி,புளு டால்பின் பள்ளி உட்பட பல பள்ளிகளில் இருந்தும் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.மாணவர்கள் காயத்ரி,மாதரசி,சஞ்சீவ்,சந்தியா,கீர்த்தியா,பாக்கியலெட்சுமி ,சந்தியா ஆகியோர் சிறப்பாக கண்காட்சியில் பங்கு பெற்றதற்காக பரிசுகள் பெற்றனர்.நிறைவாக அ .மு.மு.அறக்கட்டளை திட்ட மேலாளர் சஜிதா நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கருப்பையா,முத்துமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் இலவச நடமாடும்  அறிவியல் வாகனத்தை   சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குயின் எலிசபெத் துவக்கி வைத்தார். அ .மு.மு.அறக்கட்டளை மற்றும் அகஸ்தியா அறக்கட்டளை பொறுப்பாளர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment