Saturday 14 July 2018

கடின உழைப்பின் மூலம் நல்ல மதிப்பீட்டை பெற்றவர் காமராசர் 
கல்வி வளர்ச்சி நாள் விழாவில்
 
கல்லூரி முதல்வர் பேச்சு 

 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

    விழாவில் ஆசிரியை முத்தமீனாள் வரவேற்றார். விழாவின் தொடக்கமாக அபிராமி அந்தாதி,திருக்குறள் நடனம் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த்   விழாவிற்கு தலைமை தாங்கி பேசுகையில், காமராஜர் எத்தனையோ தலைமுறை தாண்டியும் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு உள்ளார்.கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் .சாதாரண குடும்பத்தில் இருந்து முதலமைச்சர் ஆனவர்.உழைப்பு,விடாமுயற்சி உடையவர் .அவர் ஏற்படுத்தி கொடுத்த கல்வி கூடங்கள்   அனைவருக்கும் உபயோகமாக உள்ளது.விட்டு கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.இவ்வாறு பேசினார்.காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் அட்சயா,முகல்யா,முத்தய்யன் ,நதியா,ஜனஸ்ரீ ,ஈஸ்வரன்,ஐயப்பன்,சக்திவேல்,பாக்கியலட்சுமி,சந்தியா ஆகியோருக்கு தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த்   பரிசுகளை வழங்கினார்.விழா நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
                                 காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைச் சிறப்பிக்கும் வகையிலும் அந்தத் திட்டம் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் சத்துணவாக பல வகை சாதங்களைச் சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.சுவையான சாத வகைகளோடு காமராஜர் விழா கொண்டாடப்பட்டது.

                    

 பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த்  தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.

No comments:

Post a Comment