விதை பென்சில் வழங்குதல் விழா
பள்ளி மாணவர்களுக்கு பசுமை பரிசு வழங்கி அசத்திய பள்ளி
மாணவர்கள் செடி வளர்க்க பென்சில் வழியாக ஆர்வத்தை தூண்டும் பள்ளி
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விதை பென்சில் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை பள்ளி மாணவர் கார்த்திகேயன் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி மாணவர்கள் அனைவருக்கும் பசுமை இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட விதை பென்சிலை மாணவர்களிடம் வழங்கி பேசுகையில் ,நீங்கள் கையில் வைத்துள்ள பென்சில்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்பட்டவை.பென்சிலின் பின்பாகத்தில் தொப்பி போன்று உள்ள கேப்சுல் உள்ளே கீரை,தக்காளி,பெல்லாரி வெங்காயம்,கத்தரிக்காய் உட்பட 30கும் மேற்பட்ட செடிகளின் விதைகள் கொண்ட கலவை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களாகிய நீங்கள் பென்சிலை எழுதுவதற்கு முன்பு விதைகள் உள்ள கேப்சுலை கழட்டி விதைகளை மண்ணில் விதைத்து வளர்த்தால் ,பென்சில் எழுதி முடிப்பதற்குள் விதைகள் செடியாக வளர்ந்து விடும்.புதிய முயற்சியாக இயற்கையை வளர்க்கவும் , பள்ளி மாணவர்களுக்கு பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரிசாக பசுமை பென்சில் வழங்கிய துபாய் ரவி சொக்கலிங்கம்,பசுமை இந்தியா நாகராஜன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்று பேசினார்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் செய்து இருந்தார்.நிறைவாக பள்ளி மாணவி காயத்ரி நன்றி கூறினார்.
பசுமை பென்சிலை பெற்றுக்கொண்ட மாணவர்களில் சிலர் பள்ளியில் விதைகளை விதைத்து தண்ணீர் ஊற்றினார்கள்.பிற மாணவர்கள் அனைவரையும் வீட்டில் சென்று விதைகளை விதைத்து செடி வளர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.பென்சில் எழுதி முடிப்பதற்குள் செடியை காப்பாற்றி வளர்க்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் ஆச்சரியத்துடன் விதை உள்ள பசுமை பென்சிலை பார்த்துக்கொண்டே சென்றனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் பசுமை பரிசாக விதை பென்சில் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment