Sunday 17 June 2018


எளிய அறிவியல் சோதனைகள் 
 
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் செயல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.




                                      நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் சபரி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் முத்துச்செல்வன் மற்றும் ராஜ்கமல் ஆகியோர்அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள்  மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.நிகழ்வில் திரவத்தின் பருமன் கண்டறிதல் ,விசையின் வகைகள் ,பொருள்களின் இடத்தை அடைக்கும் பண்பு ஆடியின் பயன்கள் போன்ற சோதனைகள் நேரடியாக மாணவர்களே செய்து கற்று கொண்டனர்.  நிறைவாக மாணவர் கார்த்திகேயன்  நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள்  வாயிலாக மாணவர்கள் நேரடியாக அறிவியல் சோதனைகளை   செய்து கற்று கொண்டனர்.

No comments:

Post a Comment