நிலவேம்பு குடிநீர் வழங் குதல்
பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர்கசாய ம் வழங்குதல் துவக்க விழா
தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர் சபரி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம்
மாணவர்களுக்கு நிலவேம்புகுடிநீ ர் கசாயத்தை மாணவர்களுக்கு வழங்கினார் . பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தேவகோட்டை நகராட்சி சார்பில் நிலவேம்புகுடிநீர் வழங்க
ஏற்பாடுகள் செய்துள்ளது.டெங்கு தடுப்பு முறைகள் தொடர்பாகவும்
விளக்கப்பட்டது.பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே வரும் முன் காக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர்கசாயத் தை
தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு முக்கிய நோய் பதிப்பில் இருந்து தங்களை
பாதுகாத்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் சுமார் 15 மி.லி .குடித்தால்
போதுமானது. மாணவர்கள் அனைவருக்கும்,ஆசிரியர்களுக்கும் நிலவேம்புகுடிநீர் வழங்கப்பட்ட து.நிறைவாக பள்ளி மாணவி காயத்ரி நன்றி கூறினார்.நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சத்துணவு அமைப்பாளர் தென்றல் செய்து இருந்தார்.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவ,மாணவியர்க்கு நிலவேம்பு கு டிநீர் கசாயம் வழங்கினார்.
No comments:
Post a Comment