முதல் நாள் சுற்று பயணம் :
அறிவியலின் அதிசயத்தை விளக்கும் விஸ்வேஸ்வரய்யா மியூசியம்
சூரிய உதயம் காண நந்தி மலை
பல ஆண்டுகளுக்கு பின்பு எப்படி இருப்போம் என்பதை யோசிக்க வைக்கும் இஸ்ரோ
ராமானுஜரின் திருமேனி மிளிரும் மேல்கோட்டை
பேப்பரை உள்ளே விட்டு வெளியே எடுக்கும் வகையில் அமைந்துள்ள தூண் காண பேலூர் செல்லுங்கள்
இசையுடன் தண்ணீர் நடனம் ஆடி அசத்தும் பெங்களூரு இந்திரா காந்தி இசையுடன் நீர் ஊற்று பகுதி
பெங்களூருவில் ஐந்து நாட்கள் சுற்று பயணம்
காரைக்குடியில் இருந்து பெங்களூரு செல்லுதல்
காரைக்குடியில் இருந்து திருச்சி சென்று அங்கு இருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் ஏறி மறுநாள் காலை பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றோம்.அங்கு எங்களின் உறவினர் திரு.சேது அவர்களின் வீட்டில் தங்கினோம்.
ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் போது ஏற்பட்ட திருப்பம் :
நாங்கள் ரயில் நிலையத்தில் இறங்கி நிற்கும்போது ஓலோ புக் செய்த வண்டி வந்தது.ஆனால் எங்களை ஏற்றாமல் வேறு சவாரி இருப்பதாக சொல்லி விட்டு சென்று விட்டார்.அதன் பிறகு உபேர் புக் செய்து மீண்டும் சென்றோம்.அப்போது அந்த வண்டி டிரைவர் அவர்களிடம் அன்புடன் பேசினேன்.அப்போது அவரின் மொபைல் எண் வாங்கி கொண்டோம்.அதுவே எங்களுக்கு பின்னாளில் பெரும் உதவியாக இருந்தது.அது ஒரு திருப்பம்.பின்பு சொல்கிறேன்.
முதல் நாள் சுற்று பயணம் :
இஸ்ரோ பார்க்க அனுமதி பெறுதல் :
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் உள்ளே செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அனுமதி பெற்று இருந்தோம்.இரண்டு நாட்களுக்கு முன்பு மெயில் அனுப்பினோம்.உடன் அடுத்த நாள் திரு.முருகன் ,விஞ்ஞானி அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு எங்களது விவரங்களை அனுப்ப சொன்னார்கள்.உடன் அனுப்பினோம்.எங்களிடம் அன்பாகவும் பேசினார்கள்.
மறுநாள் எங்கள் உறவினர் வீட்டில் இருந்து நாங்கள் கிளம்ப தயாரானோம்.காலை 9 மணிக்கெல்லாம் திரு.நிர்மல் குமார் என்பவர் எங்களை தொடர்பு கொண்டு எப்படி வரவேண்டும் என்று விரிவாக சொன்னார்கள்.
இஸ்ரோ உள்ளே செல்லுதல் :
எங்கள் உறவினர் வீட்டில் இருந்து காலை 9.15 மணி அளவில் ஓலோ புக் செய்து அரை மணி நேரத்தில் நாங்கள் சரியாக 9.45 மணிக்கு இஸ்ரோ சென்று அடைந்தோம்.அங்கு திரு.நிர்மல் குமார் என்பவர் மிக அழகாக எங்களிடம் பேசி உள்ளே அழைத்து சென்றார்.
கடுமையான கட்டுப்பாடுகள் :
உள்ளே செல்லும் முன் கட்டுப்பாடுகள் அதிகம்.நம்மிடம் உள்ள அனைத்து மொபைல்,மற்ற பைகள் அனைத்தையும் வாங்கி கொண்டு உள்ளே அனுப்புகிறார்கள்.
இஸ்ரோ தொடர்பாக நல்ல விளக்கம் :
திரு.நிர்மல் குமார் அவர்களும்,திருமதி.வனிதா ஆகிய இருவரும் மிகவும் நல்ல முறையில் எங்களுக்கு மிக எளிதாக புரியும் வகையில் இஸ்ரோ தொடர்பாக விளக்கி சொன்னார்கள்.ஏழு நிமிடம்,எட்டு நிமிடம் ஓட கூடிய வகையில் சந்திரயன் அனுப்பும் வீடியோ,எவ்வாறு செயற்கை கோள் தயாராகி மேலே செல்கிறது என்பதை விளக்கும் படங்கள் அருமையாக புரியும் வகையில் விளக்கமாக காட்டப்பட்டது .
செயற்கை கோளின் பாகங்கள் மற்றும் செயற்கை கோள் அனுப்புதல் தொடர்பாக விளக்குதல் :
செயற்கை கோள் அதன் செயல்பாடுகள் என அனைத்துமே மிக அருமையாக எடுத்து சொன்னார் திருமதி. வனிதா அவர்கள் எங்களிடம் பேசும்போது ,நினைத்த நேரமெல்லாம் நாம் செயற்கை கோள் அனுப்ப இயலாது.சுமார் ஐந்து வருடம் முன்பாக நமக்கு என்ன தேவை என்று கணித்து அதனை யோசித்து ஜெனிவாவில் உள்ள உலக செயற்கை கோள் அனுப்பும் இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.அதன் பிறகு நாம் யோசித்து அதனை செயல் படுத்த வேண்டும்.
அரசு துறைகளில்,பொது மக்களிடம் இருந்து தகவல் பெறுதல் :
எந்த மாதிரியான செயற்கை கோள் அனுப்ப வேண்டும் என்பதை நாங்கள் அரசு துறைகளிலும்,பொது மக்களிடமும் இருந்து கருத்துக்கள் பெற்று அதன் மூலம் மக்களுக்கு ,அரசுக்கு தேவையான ,பயன்படும் விதத்தில் அனுப்புவோம்.தண்ணீர் எங்கு உள்ளது,தொலை தொடர்பு இன்னும் பல உதவி செயற்கை கோள் அனுப்பப்பட்ட உள்ளன .
செயற்கை கோள் குவிவதால் விண்ணில் பிரச்சனை :
செயற்கை கோள் ஒவ்வொன்றின் தன்மைக்கு ஏற்ப அவை சில காலங்கள் இருக்கும்.பிறகு அவை விண்ணில் சில இடங்களில் விழுந்து விடும்.அதனை தற்போது வெளியே கடத்துவது எவ்வாறு என்று அனைத்து நாடுகளும் யோசித்து கொண்டு உள்ளன .நாம் வெகு விரைவில் இதனில் தன்னிறைவு அடைவோம்.என்று சொன்னார்.
இஸ்ரோ மியூசியம் :
இஸ்ரோ உள்ளே செயற்கை கோள் தொடர்பான அனைத்து தகவலும் உள்ள மியூசியம் வைத்து உள்ளனர்.மிக அருமை.ஆரம்ப காலத்தில் இருந்து உள்ள செயற்கை கோள் தொடர்பான வரலாறு நல்ல முறையில் எடுத்து சொல்லப்பட்டுள்ளது.விண்ணில் எப்படி செயற்கை கோள் இருக்குமோ அதுபோன்று இங்கு உள்ளே உள்ள இடத்தில் இருந்து மிக பொறுமையாக 15 நாட்கள் வைத்து இருப்பார்கள் என்று அறிந்தேன்.
ரோபோ தயாரிப்பு :
வெகு விரைவில் இந்தியாவில் தயாரான ரோபோவை விண்ணிற்கு செலுத்தி அங்கு சில நாட்கள் நடக்க விட்டு மீண்டும் வருவது தொடர்பான ஆராய்ச்சி செய்து கொண்டுள்ள ரோபோவை பார்த்தோம்.மிக அருமை.நல்ல முன்னேற்றம்.அது தொடர்பாகவும் நல்ல முறையில் புரியும் வகையில் திருமதி வனிதா எங்களிடம் விளக்கினார்.
எங்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய விஞ்ஞானி முருகன் :
விஞ்ஞானி முருகன் அவர்களிடம் முதல் நாள் (லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) பேசும்போது ,பெங்களூருவில் உள்ளே சுற்றி பார்ப்பது தொடர்பாக பேசினோம்.அவருக்கு மெயில் வழியாக சில தகவல் அனுப்பினேன்.என்ன ஆச்சிரியம்,அவரது பல்வேறு பணிகளுக்கு இடையில் மறு நாள் அவர் எங்களை சந்திக்க முடியாத சூழ்நிலையிலும் ,திரு.நிர்மல் குமார் அவர்களை எங்களுடன் சந்திக்க செய்து,முதல் வேலையாக நாங்கள் எங்கெல்லாம் ,எப்படி செல்லலாம் என்று விரிவாக பேப்பரில் டைப் செய்து அவர் கையில் கொடுத்து எங்களிடம் கொடுக்க செய்தார் .உண்மையில் அவரை நேரில் சென்று வாழ்த்துவதற்காக சென்று வாழ்த்தி விட்டு ,அவரிடம் இந்த தகவலையும் சொல்லி விட்டு வந்தோம்.
திரு.மயில்சாமி அண்ணாதுரை அய்யா அவர்களுக்கு நன்றி ;
இஸ்ரோ பயணத்தில் நாங்கள் மிகப்பெரிய அளவில் நன்றி சொல்ல கடமை பட்டது அய்யா மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு தான்.நாங்கள் அவரை இஸ்ரோ உள்ளே செல்வதற்கு அனுமதி கேட்டபோது,உடனடியாக எங்களுக்கு அனுமதி கொடுத்து திரு.முருகன்,திரு.நிர்மல் குமார் ,திருமதி.வனிதா ஆகியோரையும் எங்களுக்கு உதவி செய்ய சொன்னதற்கு மிகுந்த நன்றி சொல்லி கொள்ளவேண்டும்.அருமையான பயணம் .நல்ல உதவி.
அறிவியலில் நல்ல ஆர்வம் ஏற்படுத்திய விஞ்ஞானி :
இது வரை செயற்கை கோள் பற்றி ஓரளவு எண்ணம் இருந்தாலும் நல்ல விதமாக விளக்கி எங்களுக்கு புரிய வைத்தார்கள்.விஞ்ஞானி வனிதா அவர்களின் விளக்கத்தை கேட்ட பிறகு ,எனது மனைவி சொன்னார் ,இவர் போன்று விளக்கமாக பேசி இருந்தால் எனக்கு அறிவியலில் நல்ல ஆர்வம் வந்திருக்கும் என்று சொன்னார்.
மேலும் இஸ்ரோவில் வருடம் 300கும் மேற்பட்ட பொறியாளர்கள் தேர்ந்தெடுக்க படுவதாகவும் சொன்னார்கள்.
மதியம் ஒரு மணியளவில் இஸ்ரோவில் இருந்து வெளியே வந்து அங்குள்ள கேண்டினில் உணவு சாப்பிட்டு விட்டு 1.45 மணி அளவில் வெளியே வந்தோம்.
சிவன் கோவில் :
அடுத்த இடமாக இஸ்ரோ எதிரில் சிறிது தூரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு நடந்து சென்றோம்.மிக பெரிய குகை உள்ளே செட் அமைத்து நம்மை உள்ளே விட்டு ,பெரிய விஞாயகர் ,சிவன் சிலைகள் உள்ள இடத்தின் அருகே விடுகின்றனர்.நமக்கு பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.ஆனால் முற்றிலும் வணிகமயமாக உள்ளது.அனைத்துக்கும் காசு கொடுத்துதான் உள்ளே செல்ல வேண்டும்.45 நிமிடம் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் வெளியே வந்து,பேருந்து ஏறி 20 நிமிட பயண நேரத்தில் HAL மியூசியம் சென்றோம்.
முதலமைச்சருக்காக 30 நிமிடம் தாமதமான பயணம் :
தமிழ்நாட்டில் எப்படி முதல் அமைச்சர் ரோட்டில் சென்றால் வாகனம் நிறுத்தப்படுமோ,அதே போன்று முதலமைச்சர் வருகிறார் என்று சுமார் 30 நிமிடம் ரோட்டில் வாகனத்தை தடை செய்து விட்டனர்.அதனால் எங்களின் பயணமும் சுமார் 30 நிமிடம் தடைபட்டது.
HAL மியூசியம் :
மிகவும் அருமையான இடம் .சுமார் 2.45 மணிக்கு இங்கு உள்ளே சென்றோம்.ரூபாய் 50 ஒரு நபருக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.உள்ளே சென்ற உடன் பெரிய ,பெரிய வானுர்திகள் உள்ளன.
பார்க்க பிரமிப்பை ஏற்படுத்தும் வானுறுதிகள் :
பெரிய அளவில் வானுறுதிகளை நாம் பார்க்கும்போது நமக்கே பிரமிப்பாக உள்ளது.அதனை சுமார் ஒரு மணி நேரம் பார்த்த பிறகு உள்ளே தோட்டம் அமைத்து உள்ளனர்.
HAL உள்ளே தோட்டம்,பார்க்,சூரிய ஒளி தயாரிப்பிலான பொருள்கள் :
உள்ளே செல்லும்போது பெரிய நீர்வீழ்ச்சி செல்லும் அளவில் தண்ணீர் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக தண்ணீர் ஊற்றி கொண்டு உள்ளது .பார்க்கவே மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது .பிறகு பின்பக்கம் சென்றால் அருமையான தோட்டம்,அனைத்து மூலிகை செடிகளும் வளரும் இடம்,சூரிய ஆற்றலை கொண்டு சக்தி தயாரிக்கும் இடம்,வண்ண பூக்கள் உள்ள இடம் என அனைத்துமே பிரமிப்புடன் நம்மை தொடர்ந்து பார்க்க வைக்கிறது.
கண்ணுக்கு அழகு வண்ண மீன்கள் :
உள்ளே நாம் (லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) ஸ்னாக்ஸ்,டீ சாப்பிட இடம் உள்ளது .அங்கு மீன்கள் வளர்க்கும் இடம் வைத்து உள்ளனர்.நன்றாக பெரிய மீன்கள் அங்கு உள்ளன.மிகுந்த மகிழ்ச்சி.
போரில் பயன்படுத்திய ஏர் கிராஃப்டுகள் :
உள்ளே உள்ள மியூசியத்தில் நமது நாட்டு போரில் பயன்படுத்திய ஏர் கிராஃப்டுகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது.அதன் ஒவ்வொரு பாகமும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.அதனை பார்க்கும்போது நமக்கு பல்வேறு விஷயங்கள் புரிகின்றன.
பல்வேறு ஏர் கிராஃப்டுகள் தயாரித்தவர்கள் தொடர்பான படங்கள் :
ஏர் கிராஃப்டுகள் தயாரித்தவர்கள் ,HAL எவ்வாறு உருவானது,யாரெல்லாம் இதனை நிர்வாகித்தார்கள்,என்ன விருதெல்லாம் பெற்றுள்ளனர் போன்ற விவரங்களை மிக விரிவாக அழகிய படங்களுடன் ஆதி முதல் அந்தம் வரை தெளிவான விளக்கத்துடன் காண்பித்து காட்சி படுத்தி உள்ளனர்.பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.
HAL மியூசியத்தில் கைடும் உண்டு :
இங்கு இலவச கைடு உண்டு என்பது எங்களுக்கு பின்புதான் தெரிந்தது.நீங்கள் உள்ளே செல்லும்போது இடது பக்கம் செல்லாமல் ,வலது பக்கம் சென்றால் அங்குதான் கைடு உள்ளனர்.அவர்களை பார்த்தால் உங்களுக்கு நல்ல உதவியாக இருக்கும்.இன்னும் கூடுதலான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
HAL மியூசியத்தில் விளையாட்டும் உண்டு :
10 நிமிடத்திற்கு நேரத்திற்கு ரூபாய் 100 வீதம் செலுத்தி நீங்கள் ஏர் கிராஃப்டுகள் ஓட்டுவது போன்று கணினியில் ஓட்டலாம்.அது ஒரு விளையாட்டு.பெரியவர்,சிறியவர்கள் இருவருக்கும் உண்டு.
HAL பார்க்க ஒரு நாள் வேண்டும் :
இன்னும் பொறுமையாக பார்த்தால் கண்டிப்பாக ஒரு நாள் வேண்டும்.நாங்கள் அதனை விட்டு பிரியா மனமில்லாமல் மாலை 6 மணி அளவில் வெளியில் வந்தோம் .
புல் டெம்புல் நோக்கி பயணம் :
HALயில் இருந்து AC பேருந்து ஏறி மிக கடுமையான ட்ராபிக் நடுவே நாங்கள் மார்க்கெட் நிறுத்தம் வந்து இறங்கினோம்.அங்கு இருந்து ராமகிருஷ்ண மடம் நிறுத்தம் சொல்லி டிக்கெட் வாங்கி வந்து இறங்கினோம்.
பேருந்துகளில் நிறுத்தம் சொல்லுதல் :
அரசு டவுன் பஸ்களில் அழகாக பேருந்து நிறுத்தம் சொல்லப்படுகிறது.தானியங்கி வழியாக தானாகவே பேருந்து நிறுத்தம் வந்த உடன் சரியாக சொல்லப்படுகிறது.எங்களுக்கும் அது வசதியாக இருந்தது.ராமகிருஷ்ணா மடம் நிறுத்தத்தில் இறங்கி ஐந்து நிமிடம் நடந்து சென்றால் புல் டெம்பிள் வருகிறது .
புல் டெம்பிள் :
நந்திக்கு என்று கோவில்.சில படிகள் ஏறி செல்ல வேண்டும்.நமது தஞ்சாவூரில் உள்ள நந்தி போன்று மிக பெரிய அளவில் வளர்ந்து உள்ளது.அங்கு உள்ள குருக்கள் தானாகவே வளர்ந்ததாக சொன்னர்கள்.இந்த கோவில் தொல்லியல் துறையின் கீழ் வருகிறது.பார்க்க வேண்டிய இடம்.பார்க்கவேண்டிய கோவில்.
பெரிய விஞாயகர் கோவில் :
பெரிய நந்தியை பார்க்க செல்வதற்கு முன்பாக நீங்கள் கீழே பார்த்தால் சுயம்பாக வளர்ந்த விஞாயகர் உள்ளார்.மிக பெரிய உருவம்.இவை இரண்டுமே பல ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கோவில்.பார்க்க வேண்டிய கோவில்கள்.
விஞாயகருக்கும்,நந்திக்கும் கும்பிடு போட்டு விட்டு அங்கு இருந்து அடுத்த கோவிலுக்கு பயணமானோம்.
தலை குனிந்து சுற்றி வர வேண்டிய கோவில் :
புல் கோவிலில் இருந்து வெளியில் வந்து ஆட்டோ எடுத்து கொண்டு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கோவிலான கதி கந்தேஸ்வரா கோவிலுக்கு சென்றோம்.சரியான இறக்கத்தில் இருந்தது அந்த கோவில்.இதுவும் தொல்லியல் துறையின் கீழ் உள்ள கோவில்.இங்கு இருந்து பரத்வஜா முனிவர் இங்கு இருந்து காசிக்கு சென்றதாக சொல்ல படுகிறது.இங்கு கோவில் சுற்று பிரகாரம் செல்ல வேண்டும் என்றால் முழுவதும் குனிந்து கொண்டே தான் செல்ல வேண்டும்.இது அரசரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ள கோவில்.கோவிலின் பெயர் : கதி கந்தேஸ்வரர் கோவில் என்பது ஆகும்.சிவன்,பார்வதி உள்ள கோவில்.மிகவும் அருமையான கோவில்.ஜனவரி மாதத்தில் ஒரு நாள் மிகப்பெரிய விசேடம் இருக்கும் என்றும் சொன்னார்கள்.சில மணி நேரங்கள் அந்த கோவிலில் இருந்து விட்டு மீண்டும் நாங்கள் அங்கு இருந்து வீட்டுக்கு பயணம் ஆனோம்.
இரவில் மலை ஏறுவது போல் மேட்டில் ஏறிய அனுபவம் :
இரவு எட்டு மணி அளவில் நாங்கள் அந்த கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வந்தால் சில நிமிடங்கள் நடந்தால் பஸ் ஏராளம் என்று சொன்னர்கள்.ஆனால் நாங்கள் நடக்க ஆரம்பித்தால் ,ரோடு மிகவும் ஏற்றதில் உள்ளது.மிகவும் சிரமப்பட்டு ஏறி சென்று பஸ் விசாரித்தால் யாருக்கும் நாங்கள் சொன்ன நிறுத்தம் தெரியவில்லை.மீண்டும் ஆட்டோ பிடித்து நேஷனல் கல்லூரி என்கிற நிறுத்தத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டோம்.
ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவம் :
ஆவலுடன் ஹோட்டலில் சாப்பிட சென்றால் அந்த ஹோட்டலோ நின்று கொண்டு சாப்பிடும் ஹோட்டல்.வேறு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு நாங்கள் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து எங்கள் இருப்பிடம் நோக்கி சென்றோம்.
மெட்ரோ ட்ரெயின் அனுபவம் :
ஹோட்டலில் இருந்து சில நிமிடங்கள் நடந்து சென்று மெட்ரோ ட்ரெயின் ஏறி செல்லலாம் என்று சென்றோம்.அங்கு டிக்கெட் வாங்கி கொண்டு ,அப்போது ஒரு டோக்கன் கொடுத்தார்கள்.அதனை ஸ்கேன் செய்தால்தான் உள்ளே செல்லலாம் என்று தெரியாமல் நான் மட்டுமே ஸ்கேன் செய்து சென்று விட்டேன்.எனது மகன் இது தெரியாமல் உள்ளே வர முயற்சி செய்ய ,அவனை கதவு டம் என்று அடிப்பது போல் வந்து விட்டது.பிறகு அவர்களுக்கு என்று என்னிடம் உள்ள டோக்கனை கொடுத்த பிறகு மிக எளிதாக உள்ளே வந்து விட்டனர்.
பயண நேரத்தை குறைத்த மெட்ரோ ட்ரெயின் :
சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய தூரத்தை எங்களுக்கு வெறும் அரை மணி நேரத்தில் மிக எளிதாக நாங்கள் செல்ல வேண்டிய இடம் சென்று விட்டோம்.பிறகு அங்கு இருந்து ஆட்டோ வழியாக எங்கள் இருப்பிடத்தை இரவு 10 மணி அளவில் சென்று அடைந்தோம்.மெட்ரோ ட்ரெயின் ஒவ்வொரு நிறத்தையும் மிக அழகாக சொல்லி எங்கள் இறங்கும் இடம் வருவதையும் ,முன் கூட்டியே சொல்லி தெளிவாக இறங்க வழிவகை செய்தது அருமை.இடையில் இந்திரா நகர் மெட்ரோ ட்ரெயின் வெளியே உள்ள அடையாறு ஆனந்த பவனில் சாப்பிட்டோம்.பிறகு வீட்டை அடைந்தோம்.
நன்றி சொல்ல வேண்டிய உறவினர்கள் :
சிறுகூடல்பட்டியை சார்ந்த திரு.கண்ணன் (மைசூர் ,குஷால்நகரில் வசிப்பவர் ) அவர்கள் எங்களுக்கு பார்க்கவேண்டிய இடங்கள் தொடர்பாக தெளிவாக சொன்னார்கள்.நாங்கள் தங்கி இருந்த வீட்டின் உறவினர் சேது அண்ணன் அவர்களும் சரியான வழிகளை சொல்லி ஒரே நாளில் சுற்று பயணத்தில் மாநகர பேருந்து,ஆட்டோ,மெட்ரோ ட்ரெயின் ஆகியவைகளை ரூட் சொல்லி உதவி செய்தார் .இருவருக்கும் மிகுந்த நன்றி.
வழிகளை சரியாக சொன்ன கர்நாடகக்காரர்கள் :
எங்களுக்கு (லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) பேருந்து,மெட்ரோ ட்ரெயின் என அனைத்து இடங்களிலும் சரியான உதவிகளை செய்த அனைத்து கர்நாடக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.பேருந்தில் நடத்துனர் ,பேருந்து கூட்டமாக இருந்த போதிலும் எங்களுக்கு சரியான நிறுத்தத்தை சொல்லி ஸ்னேகத்துடன் இறக்கி விட்டனர்.ஆட்டோ ஓட்டுநர்களும்,கார் ஓட்டுனர்களும் ,கோவில்களில் உள்ளவர்களும்,தெருவில் நடந்து செல்லும்போது வழி சொன்ன நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
அறிவியலின் அதிசயத்தை விளக்கும் விஸ்வேஸ்வரய்யா மியூசியம்குறித்து அடுத்த தகவலில் தொடரும்.அது வரை உங்கள்
லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி
chokkalingamhm@gmail.com

No comments:
Post a Comment