Thursday 8 March 2018

 எழுத்தாளர்  மாணவர்களுடன் கலந்துரையாடல் 

நாடகம் நடிக்க வைத்து கதையின்  கருத்தை 
மாணவர்களாலே விளக்க செய்த பத்திரிகையாளர் 



  
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் பத்திரிகையாளருடன் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.
                            கலந்துரையாடல் நிகழ்வுக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பத்திரிகையாளர் யுவராஜன் மாணவர்களிடம் கதை சொல்லி நடிக்க வைத்து கருவை மாணவர்களாலே விளக்க செய்தார் . கதை குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார் . புகைப்பட கலைஞர் சாய் தர்மராஜ் நிகழ்வில் பங்கேற்றார்.ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் பத்திரிகையாளர் யுவராஜன் மாணவர்களுக்கு கதை சொல்லி  நடிக்க செய்து கதையின் கருவை மாண்வர்களாலே எடுத்து சொல்ல செய்த கலந்துரையாடல் நடைபெற்றது.


மேலும் விரிவாக :

பத்திரிகையாளரும் ,எழுத்தாளருமான யுவராஜன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களை நடிக்க வைத்த அனுபவத்தை தனது முகநூலில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.
 ஆஸ்கர் மழலைகள்!


வருடத்தின் 365 நாள்களும் தன் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் பாடப் புத்தகத்துக்கு வெளியிலான அறிவைப் புகட்ட சுழன்றுக்கொண்டிருப்பவர், லெ.சொக்கலிங்கம். தேவக்கோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அந்தச் சிறிய நடுநிலைப் பள்ளிக்கு ஜெர்மனியில் இருந்தும் வி.ஐ.பி வந்ததுண்டு; ஜோலார்பேட்டையில் இருந்தும் வந்ததுண்டு. கலெக்டரும் வந்து கல்விக்கு வழி காட்டியதுண்டு; காகித மடிப்பாளரும் வந்து குதூகலப்படுத்தியது உண்டு.
குழந்தைகள் ஒவ்வொருவரும் செம ஷார்ப். அழகாக கதைகள் சொல்கிறார்கள், மழலைக் குரலில் ஆங்கிலத்தை இனிதாக்குகிறார்கள். ஒரு கதையைச் சொல்லி, 'நான் சொல்லும்போதே நீங்க நடிச்சுக் காட்டணும்' என்றதும், அடுத்தடுத்த நொடிகளில் புரிந்து நடித்து ஆஸ்கர் பெறுகிறார்கள். சுட்டி விகடனுக்காக அங்கே எடுத்த போட்டோ காமிக்ஸ், இன்னும் சில தினங்களில்...


சத்துணவை சாப்பிட்டு பள்ளியை  பாராட்டிய வார இதழின் உதவி  பொறுப்பாசிரியர் 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு சமீபத்தில் விகடனின் உதவி பொறுப்பாசிரியர் யுவராஜன் வருகை தந்தார்கள்.அப்போது அவர் மாணவர்களிடம் கலந்துரையாடல் செய்தார்.மாணவர்களையே வைத்து ஒரு கதை சொல்லி அதனை நடிக்கவும் செய்து,அந்த கதை வழியாக என்ன அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டு அதன் கருத்தை மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் அவர்களிடமிருந்தே கேட்டு விளங்க வைத்தார்.

 சத்துணவை சாப்பிட்டு விட்டு பள்ளியை  பாராட்டுதல் 

மதியம் சாப்பிடும் நேரம் வந்த உடன் மாணவர்களுடன் உட்கார்ந்து  ( மேஜையின் மீது அமர்ந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதனை மறுத்து மாணவர்களுடன் உட்கார்ந்து ) தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில் உள்ள உணவை சாப்பிட்டு அதனை பள்ளி சத்துணவு பதிவேட்டில் எழுதி பாராட்டவும் செய்தார் .மேலும் மதியம் மாணவர்களை கொண்டு விகடன் இதழுக்காக நாடகமும் படமாக்கப்பட்டது.அவரது வருகை மாணவர்களின் மனதில் மட்டுமல்லாமல் பள்ளியில் உள்ள அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து கொண்டது .

 நன்றிகள் பல 

சென்னையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து தேவகோட்டை வந்து மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி ,மாணவர்களை கொண்டு நாடகமும் எடுத்து சென்ற யுவராஜன் அவர்களுக்கும்,பொறுப்பாசிரியர் அவர்களுக்கும்,செய்தி ஆசிரியர் அவர்களுக்கும்,மாணவர்களை படம் பிடித்த புகைப்பட கலைஞர் சாய் தர்மராஜ் அவர்களுக்கும் ,விகடன் குழுமத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அரசு பள்ளி மாணவர்களின் படங்கள் இளம் வயதில் நாளிதழ்களில் வெளிவரும்போது அவர்கள் பல வருடங்கள் கழித்து அதனை பார்க்கும்போது அளவில்லாத மகிழ்ச்சிக்கு உள்ளாவார்கள்.அதனை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் வாய்ப்புகளை வழங்கி வரும் சுட்டி விகடன் குழுமத்திற்கு நன்றிகள் பல.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.






No comments:

Post a Comment