Monday, 12 March 2018

பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி  முகாம் 







தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தடுப்பூசி  முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.ஐந்து வயது மற்றும் பத்து வயது முடிந்த மாணவர்களுக்கு டி .டி .மற்றும் டி.பி.டி .தடுப்பூசி  டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் போடப்படுகிறது.இதனை தமிழக அரசு பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு வந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் தேவகோட்டை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மேரி மற்றும் ஆரோக்கிய செல்வி ஆகியோர்  தடுப்பூசியை  அனைத்து மாணவர்களுக்கும் போட்டார்கள்.முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்து இருந்தார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தடுப்பூசி   முகாமில் தேவகோட்டை நகராட்சி 6வது வார்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ஊசியை மாணவ,மாணவியருக்கு போட்டார்கள்.
 

No comments:

Post a Comment