Sunday 25 March 2018

 கடினம் என்று எதுவுமே கிடையாது 
முயற்சி செய்தால் எல்லாமே   முடியும் 

ஐ.ஐ.டி .பேராசிரியர் பேச்சு 





தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்று ஐ.ஐ.டி . நிதி நிர்வாக மேலாண்மை துறை தலைவர் பேசினார்.
                                                 நிகழ்வுக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் கண்மணி மற்றும் தனியார் நிறுவன மேலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய தொழில்நுட்ப கழக நிதி நிர்வாக மேலாண்மை துறை தலைவர் தேன்மொழி மாணவர்களிடம் பேசும்போது,உங்களை பார்க்கும்போது எனக்கு சந்தோசமாக உள்ளது.நீங்கள் அனைவரும் மேற்படிப்பு படிக்க வேண்டும்.படிப்பு மட்டும் இல்லாமல் பேச்சு,ஓவியம்,நாட்டியம் என அனைத்திலும் திறமையினை வளர்த்து கொள்ள வேண்டும்.நீங்கள் பெரிய அளவில் வாழ்க்கையில் வெற்றி பெற்று இந்த பள்ளியிலே என்னை போன்று சிறப்பு விருந்தினராக வந்து மாணவர்களிடம் பேச வேண்டும்.அனைத்துமே முதலில் கஷ்டமாக இருக்கும்.தொடர்ந்து பயிற்சி எடுத்தால் ,முயற்சி செய்தால் எல்லாமே நம்மால் முடியும்.இவ்வாறு பேசினார்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.நிகழ்வில் முன்னதாக மாணவர்கள் முத்தையன்,கிருத்திகா ,நித்யகல்யாணி,அட்சயா ,வெங்கட்ராமன்,சந்தியா,சத்தியா ,அஜய் ஆகியோர் திருப்பாவை,திருவெம்பாவை,மூதுரை,தேவாரம்,ஆத்திசூடி முதலியற்றவை பாடினர்கள்.நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் காயத்ரி,சக்தி,நந்தகுமார்,சந்தோஷ்,ராஜேஷ்,சின்னம்மாள் ஆகியோர் கருத்து கூறினார்கள்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்று ஐ.ஐ.டி.நிதி நிர்வாக மேலாண்மை துறை தலைவர் தேன்மொழி  பேசினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,தனியார் நிறுவன மேலாளர் ராமசாமி,தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் கண்மணி உள்ளனர்.
                  

1 comment:

  1. கல்லூரி விளையாட்டு இடங்கள வணிக வளாகநக்களாக மாறிய நிலை. 'இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறையில் உருவாகிறது" ஆறிஞ்சர் பெருமக்களோடு இணைந்திருக்க அவர்களின் ஆறவுரையை கேட்க வைப்பது - இது தன்னலம் கருதாத தொண்டு வாழ்த்துக்கள். வாழிய நலனே வாழிய நலனே.

    ReplyDelete