Tuesday 20 March 2018

ரூபாய் 10ல் மாணவர்களுக்கு எ .டி .எம்.அட்டையுடன் வங்கி கணக்கு  துவக்கி அசத்திய பள்ளி 




பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை வழங்குதல் விழா

முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு துவக்கி எ .டி .எம்.அட்டையையும் ,வங்கி கணக்கு புத்தகமும் பெற்று கொடுத்து அசத்திய பள்ளி 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதர,சகோதரிகளுக்கு வங்கி கணக்கு துவக்கி அசத்தல்

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை வழங்குதல் விழா நடைபெற்றது.
                                         
                         விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன் மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் எ .டி .எம்.அட்டைகளை வழங்கி வங்கி தொடர்பாகவும்,மாணவர்களின் சேமிப்பு தொடர்பாகவும் விளக்கினார்.மாணவர்கள் வெங்கட்ராமன்,ஐயப்பன்,ரஞ்சித்,காயத்ரி,சின்னம்மாள் ,சக்தி ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

                              முதல் வகுப்பு,   இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உட்பட பள்ளியில் உள்ள 30கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பெயரில்,அவர்கள் போட்டோ ஒட்டி குறைந்த பட்ச இருப்பு வெறும் 10 ரூபாயில் பாரத ஸ்டேட்   வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது .அவர்கள் அனைவருக்கும் எ .டி எம்.அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.மாணவர்களின் போட்டோ ஒட்டி இளம் வயதில் வங்கி கணக்கு புத்தகத்தை பார்க்கும்போது அவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.இதனால் சேமிப்பு பழக்கம் பெருகுவதுடன் அவர்களுக்கு வங்கி தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும்.பொதுவாக SBI வங்கியில் குறைந்த பட்ச இருப்பு ரூபாய்  2,000 ஆகும்.ஆனால்  பள்ளி மாணவர்களுக்கான ரூபாய் 10இல் இருப்பு உள்ள சிறப்பு திட்டத்தில் இதனை பள்ளியின் வழியாக முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை யை தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன் வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.




மேலும் விரிவாக ;


                                   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம்,எ .டி .எம்.அட்டை யை தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் வேல்முருகன் வழங்கினார்.அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது ;
                                 எங்கள் பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பாக தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் பத்து ரூபாயில் வங்கி கணக்கு துவக்கலாம் என்று சொன்னார்கள்.அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து ஆசிரியர்களின் உதவியுடன் வங்கிக்கு சென்று மாணவர்களுக்கு பள்ளியின் வழியாகவே கணக்கு துவக்க ஏற்பாடுகள் செய்தோம்.அதற்கு வங்கி மேலாளரும் எங்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்தார்.அதன் தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கி உள்ளோம்.
                                  பொதுவாக முதல் வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நமது பெயரில் வங்கி கணக்கு நமது புகைப்படத்துடன் உள்ளதை பார்த்து மாணவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.கண்டிப்பாக இதன் வழியாக சேமிப்பு முயற்சி அதிகமாவதுடன் ,வங்கி தொடர்பாகவும் அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.

எட்டாம் வகுப்பு மாணவி சக்தி ; எனக்கு கணக்கு துவக்கியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி.எனது அக்காவிடம் நான் இதை சொன்னபோது , எனக்கெல்லாம் இதுவரை கணக்கு இல்லை.உனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு உள்ளது மிகப்பெரிய விஷயம்.அதுவும் பள்ளியின் வழியாகவே கணக்கு துவக்கி உள்ளது பாராட்டுக்கு உரியது என்று சொன்னார்கள்.


முதல் வகுப்பு மாணவர் யோகேஸ்வரன்: எனக்கு எனது போட்டவுடன் வங்கி புக்கை பார்த்ததும் அவ்வளவு சந்தோசம்.நல்ல முறையில் சேமிப்பேன் என்று சொன்னார்.

மூன்றாம் வகுப்பு திவ்யஸ்ரீ : வங்கி கணக்கு புத்தகத்தின் அட்டையில் டாக்டர்,என்ஜினீயர் ,வக்கீல் ,பெரிய நிறுவனத்தின் மேலாளர் போன்ற படங்கள் உள்ளன.அவை எனக்கு மிகவும் பிடித்து உள்ளன.எனது பெயரில் ஏ.டி .எம்.அட்டை உள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.என்று சொன்னார்.

நான்காம் வகுப்பு வெங்கட்ராமன் : எனது பெயரில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது என்று சொன்னேன்.எனது அம்மா அவ்வளவு சந்தோஷப்பட்டார்கள்.எனக்கெல்லாம் 30 வயதில் தான் வங்கி கணக்கு ஆர்மபிக்கப்பட்டது.உனக்கு நான்காவது படிக்கும்போதே வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது மிகுந்த சந்தோஷம் என்று சொன்னார்கள்.

மூன்று குழந்தைகளுக்கு வங்கி கணக்கு புத்தகம் பெற்ற மாணவர்களின் தாயார்    அங்காள ஈஸ்வரி   :  எனக்கு மிகுந்த சந்தோசமாக உள்ளது.எனது மூன்று குழந்தைகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.மூன்று பேருக்கும் பள்ளியின் மூலம் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.பொதுவாக கணக்கு துவக்க வங்கிக்கு பலமுறை செல்ல வேண்டும்.ஆனால் இங்கு நாங்கள் அலையாமல் வங்கி கணக்கு குறைந்த இருப்பு தொகை  ரூபாய் 10ல் துவங்கப்பட்டுள்ளது.குறைந்த பட்சம் 2000 ரூபாய் இருந்தால் மட்டுமே பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி கணக்கு துவக்க முடியும்.ஆனால் வெறும் 10 ரூபாயில் வங்கி கணக்கு பள்ளியின் மூலமாக துவக்கப்பட்டுளத்தற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.




















































    





















No comments:

Post a Comment