Tuesday, 27 March 2018

அறிவியல் சோதனைகள் செய்து கற்றல் 




தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

                                      நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் ராஜேஷ்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் முத்துச்செல்வன் மற்றும் ராஜ்கமல் ஆகியோர்அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள்  மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.நிகழ்வில் ஒளி நேர்கோட்டில் செல்லுதல்,பன்முக எதிரொலிப்பு,ஒளி சேர்க்கை,ஒளி விலகல் போன்ற சோதனைகள் நேரடியாக மாணவர்களே செய்து கற்று கொண்டனர்.  மாணவர்கள் உமாமகேஸ்வரி ,நந்தகுமார்,சஞ்சீவ்,காயத்ரி, ,சின்னம்மாள் ,காவியா உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக மாணவர் கார்த்திகேயன்  நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் வாயிலாக மாணவர்கள் நேரடியாக அறிவியல் சோதனைகளை   செய்து கற்று கொண்டனர்.





No comments:

Post a Comment