Friday 23 March 2018


ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் கலந்துரையாடல் 




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பெற்றோர்கள்  ஆசிரியர்களுடன்   கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.                                                          நிகழ்வுக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் இணை  செயலர் அழகுராஜ் முன்னிலை வகித்தார்.மாணவர்களின் கல்வி தொடர்பான முன்னேற்றம் குறித்து பெற்றோர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் பதில் அளித்தனர்.மாணவர்கள் பள்ளியில் ஆண்டு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர்.ஆண்டு முழுவதும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த சண்முகம் என்ற மாணவருக்கும், சுற்று சூழல் துறை மாணவ    அமைச்சர் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கூட்டத்திற்கு முதலில் வருகை புரிந்த மாணவியின் தாயார் நாராயணிக்கும், நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர்கள் சீதாலட்சுமி,மகேஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.பெற்றோர்கள் சார்பாக லெட்சுமி,சொர்ணம்பிகா ,மாலா ஆகியோர் பள்ளியின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பெற்றோர்கள்  ஆசிரியர்களுடன்   கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.



மேலும் விரிவாக ;

                                  நிகழ்வில் பேசிய பெற்றோர்கள் பள்ளி குறித்து கூறியதாவது ;

மகேஸ்வரி : வாழ்வியல் திறன் குறித்த நேரடி நிகழ்வுகள் இப்பள்ளியில் நல்ல முறையில் நடத்த படுகிறது.வங்கி ,அஞ்சலகம்,காவல் நிலையம்,கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அழைத்து செல்வது,அரசு தோட்ட கலை பண்ணனைக்கு அழைத்து செல்வது என நேரடி களப்பயணமாக மாணவர்களை அழைத்து சென்று அறிவினை கொடுத்து வருகிறார்கள்.வாழ்வியல் திறன் பயிற்றுனர் நேரில் பள்ளிக்கு வந்து பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளது பாராட்டப்பட வேண்டியது.

லெட்சுமி: மாணவர்களுக்கு படிப்புடன் நல்ல உணவும் வழங்கப்படுகிறது.எனது மகன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

அழகுராஜ் ; எனது மகள் பல தடவை திருச்சி அண்ணா கோளரங்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்று உள்ளார்.மதுரை அகில இந்திய வானொலிக்கும் சென்று வந்துள்ளனர்.அங்கு நிகழ்ச்சி ஒளிப்பதிவில் பங்கேற்று எனது மகன் வந்து மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அருமை.இவை வாழ்வில் மறக்க இயலாத நிகழ்வுகள்.

சீதாலட்சுமி : பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு மாணவர்கள் பரிசுகள் பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஆங்கிலமும் நன்றாக படிக்கிறார்கள்.திருப்பாவை,திருவெம்பாவை,மூதுரை,தேவாரம்,பெரிய புராணம் போன்ற பல்வேறு பாடல்களை மாணவர்கள் அருமையாக சொல்லி பரிசுகள் பெற்று வருவது மகிழ்ச்சி தருகிறது.இவ்வாறு பேசினார்கள்.

மாலா : எனது மகள் சென்னை வரை சென்று ஐ.நா.சபை போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று வந்துள்ளார்.இது வரை தேவகோட்டையை தாண்டாத எனது மகள் சென்னை வரை ஆசிரியை உதவியுடன் சென்று வந்தது எனக்கு பெரிய ஆச்சிரியத்தை கொடுத்துள்ளது.எந்த செலவும் இல்லாமல் எனது மகள் பல்வேறு நல்ல தகவல்களை தெரிந்து கொண்டுள்ளார். ஆட்சி பணியில்  உள்ளவர்கள் பலர் இப்பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்வதால் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கும் அவர்களை போன்று உருவாக வேண்டும் என்ற  எண்ணம் உருவாகிறது.
                            அரசு மருத்துவர்கள் பலர் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களை பரிசோதித்து மருந்துகள் கொடுத்து செல்கின்றனர்.பெண் குழந்தைகளுக்கு வளரிளம் வயதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெண் மருத்துவரை அழைத்து வந்து தெடர்ந்து ஐந்து வருடமாக பயிற்சி அளித்து 
 தோற்ற நோய் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.இதுவும் பெண் குழந்தைகளுக்கு நல்ல உதவியாக உள்ளது .இவ்வாறு பேசினார்.


No comments:

Post a Comment