Friday, 23 May 2014


ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி

சான்று கிடைக்காதவர்கள் ஜூன் 7க்குள் பதிவு செய்ய வேண்டும்
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தகுதி சான்று கிடைக்காதவர்கள் ஜூன் 7க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்
தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்றால் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு 2009ல் சட்டம் இயற்றியது. இது தமிழகத்தில் 2011-2012ல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. 2012 ஜூலை 12 மற்றும் அக்டோபர் 14ம் தேதி இரு கட்டமாக நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய தகுதி சான்றுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மூலம் வழங்கிவிட்டது.


மேற்கண்ட தகுதிச் சான்று கிடைக்கப் பெறாதவர்கள் யாராவது இருந்தால் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகி தாங்கள் தேர்வு எழுதிய விவரங்களை ஜூன் 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவலை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment