Tuesday 27 May 2014


சிறுவர்களிடையே அதிகரித்துவரும் பேஸ்புக் மோகம்: ஆய்வில் தகவல்


சென்னை போன்ற பெருநகரங்களில் 8 முதல் 13 வயதுக்குள்பட்ட சிறுவர்களில் 75 சதவீதம் பேர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் வாடிக்கையாளர்களாக உள்ளது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பெற்றோரின் போதிய கண்காணிப்பு இல்லாதபட்சத்தில் சமூக வலைதளங்களை சிறுவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்புகளின் சங்கம் (அள்ள்ர்ஸ்ரீட்ஹம்) சென்னை, பெங்களூரு, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களைச் சேர்ந்த 8 முதல் 13 வயதுக்குள்பட்ட சிறுவர்களின் 4,200 பெற்றோரிடம் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது.
அதில் 75 சதவீதம் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு ஃபேஸ்புக்கில் கணக்கு உள்ளது தங்களுக்கு தெரியும் என கூறியுள்ளனர். சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க தங்கள் பிள்ளைகளுக்கு தாங்கள் உதவியதாக 82 சதவீதம் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பிள்ளைகள், பள்ளி தொடர்பான செயல்பாடுகள், பிறருடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் என நம்புவதாக 78 சதவீதம் பெற்றோர் கூறியுள்ளனர். தாய், தந்தை இருவரும் பணிக்கு செல்லும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள்தான் சமூக வலைதளங்களுக்கு அடிமையாக உள்ளதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வயதின் காரணமாக, சமூக வலைதளங்களில் நடைபெறும் ஆன்-லைன் உரையாடல் போன்றவற்றால் ஈர்க்கப்படும் சிறுவர்கள், பாலியல் தொடர்பான தவறான வழிகளில் செல்லும் அபாயம் உள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment