Tuesday 27 May 2014

சென்னை: ''சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக்கல்வி வாரியம்), பிளஸ் 2 மாணவர்களுக்கு, மறு மதிப்பீட்டு திட்டம், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள், ஒட்டுமொத்த விடைத்தாளுக்கு மறு மதிப்பீடு கேட்காமல், குறிப்பிட்ட விடைகளுக்கு மட்டும், மறு மதிப்பீடு கேட்டு, விண்ணப்பிக்கலாம்,'' என, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அலுவலர், சுதர்சன் ராவ் தெரிவித்தார்.
அவர், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 மாணவர்கள், மறுகூட்டல் செய்யும் திட்டம், ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த ஆண்டு, மறு மதிப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, மாணவர்கள், ஒரு விடைத்தாள் முழுவதற்கும், மறு மதிப்பீடு கேட்க வேண்டியதில்லை.


ரூ.300 கட்டணம்:

எத்தனை கேள்விகளுக்கான விடைகளை, சரியாக மதிப்பீடு செய்யவில்லை என, கருதுகின்றனரோ, அந்த விடைகளுக்கான கேள்விகளை மட்டும் குறிப்பிட்டு, அதற்கு மட்டும், மறு மதிப்பீடு கேட்டு, விண்ணப்பிக்கலாம். இதற்கு, 300 ரூபாய் கட்டணம். மறு மதிப்பீட்டு கோரிக்கையை, சி.பி.எஸ்.இ., இணையதளம் (www.cbse.nic.in) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதன்பின், டில்லியில் உள்ள மறு மதிப்பீட்டு குழு, மாணவர்களின் விடைகளை ஆய்வு செய்து, புதிய முடிவை, இணையதளம் வழியாக அறிவிக்கும். தற்போது, சென்னை, திருவனந்தபுரம் மண்டலங்களின் முடிவுகள் மட்டுமே வெளியாகி உள்ளன. அனைத்து மண்டலங்களின் தேர்வு முடிவுகள் வெளியான பின், மறு மதிப்பீட்டு கேட்டு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக இந்த ஆண்டு, முதல் முறையாக, ??ம் வகுப்பு விடைத்தாள்கள், இணையதளம் வழியாக மதிப்பீடு செய்யப்பட்டது. இத்திட்டம், வரும் ஆண்டில், பிளஸ் 2 தேர்வுக்கும் விரிவு படுத்தப்படும். அப்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியாகும். இவ்வாறு, ராவ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment