Friday, 12 September 2025

 

                    சமூக வலைத்தளம் மூலமாக வருமான வரி துறையிலிருந்து ITR FILE செய்வதற்கு தகவல் பெற்றவரின் அனுபவம் 






                            சமூக வலைதளம் வாயிலாக வருமானவரித் துறையில் ஐடிஆர் தாக்கல் பண்ண தெளிவான தகவல்களை பெற்று வெற்றிகரமாக ஐடிஆர் பைல் செய்து முடித்துவிட்டேன். 

                                 நண்பர்களே கடந்த 3 நாட்களாக ஐடிஆர் பைல் பண்ணுவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தேன். அதற்காக சில நண்பர்களையும் தொடர்பு கொண்டேன்.

                               சமூக வலைதளம் வாயிலாக சில நண்பர்களிடமும் கேட்டேன். பல நண்பர்களில் சிலருக்கு மட்டுமே அது தொடர்பான தகவல்கள் தெரிந்து இருந்தது.

                                   அதிலும் குறிப்பாக  ஆசிரியர்கள் திருவண்ணாமலை மணிவண்ணன், சென்னை விஸ்வநாதன், விருதுநகர் செந்தில் குமார் ஆகிய மூவரும் மற்றும் வருமான வரி துறை அதிகாரி திரு.சுப்பிரமணியன் ஆகியோர் அவர்களுக்கு தெரிந்த தகவல்களை எடுத்துக் கூறி உதவி செய்தார்கள்.

                                 இருந்த போதிலும் அந்த தகவல்களால் என்னால் ITR  தாக்கல் செய்ய இயலவில்லை. எனவே சமூக வலைதளம் வாயிலாக வருமான வரித் துறையை தொடர்பு கொண்டேன்.

                                  அதன் விளைவாக வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிகத்தெளிவாக பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறி வெற்றிகரமாக ITR FILE  செய்வதற்கு உதவி செய்தார்கள்.

                           சமூக வலைதளம் வாயிலாகவே  மீண்டும் விடாமல் முயற்சி செய்து வருமான வரித் துறையை தொடர்பு கொண்டு எனக்கு இருந்த டிமாண்ட் எஸ்டிமேட் தொகையும்   வெற்றிகரமாக FILE  செய்தேன். 

                         சமூக வலைதளம் வாயிலாக வருமான வரித் துறையை தொடர்பு கொண்டோமானால் நிச்சயமாக அவர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுகிறது.

                                    மெயில் வழியாக அனுப்பி விடலாம் என்றால் அவ்வளவு எளிதாக பதில் கிடைக்கவில்லை. 

                       சமூக வலைத்தளத்தின் மூலமாக  நம்மளை தொடர்பு கொண்டு நமக்கு ஐடிஆர் FILE  தொடர்பாகவும், பல்வேறு தகவல்களையும் எடுத்துக்கூறி உதவி செய்கிறார்கள். 

                          கடைசி வரை விடாமல் நமக்கு பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறி,கற்றுக் கொடுத்து, பொறுமையாக , தெளிவாக, ஸ்டேப் பை  ஸ்டெப்பாக  ஐடிஆர் பைல்  செய்வதற்கு உதவி செய்கிறார்கள். 


சமூக வலைத்தளத்தின் மூலமாக வருமான வரி பைல் செய்வதற்கு உதவி பெற்ற மகிழ்ச்சியுடன் 


லெட்சுமணன்  ,

காரைக்குடி.



No comments:

Post a Comment