Thursday, 11 September 2025

என் குப்பை என் பொறுப்பு :மாணவர்களுக்கு விழிப்புணர்வு

குப்பை இல்லா நகரத்தை உருவாக்க உறுதிமொழி எடுங்கள் 

நகராட்சி சுகாதார அலுவலர்  பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவோம் 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் துாய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு, 'என் குப்பை என் பொறுப்பு' என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்தலைமை தாங்கினார். .நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் பாண்டி செல்வம் பேசுகையில், ''பள்ளியிலும், பொது இடங்களிலும் குப்பையை வீசக்கூடாது. துாய்மை  குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலை சுகாதாரமான முறையில் பராமரிப்பது மாணவர்களின் கடமை. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை தரம் பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.இதனை மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோருக்கும் , உறவினர்களுக்கும் எடுத்து சொல்ல வேண்டும்.'' என்றார். தேவகோட்டை நகராட்சியின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கிற விழிப்புணர்வு தகவல்   அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார பிரிவு கிருஷ்ணமூர்த்தி, முருகேசன்,  நிகழ்விற்கான ஏற்பாடுகளை  தேவகோட்டை நகராட்சி களப்பணி உதவியாளர் ரஞ்சித்குமார் ,தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் ஜெகன் சார்லஸ், துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி,பள்ளி ஆசிரியர்கள் முத்துலெட்சுமி,ஸ்ரீதர், ஆகியோர் செய்து இருந்தனர்.

 

 

பட விளக்கம் :

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகராட்சி சார்பில்  துாய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் பாண்டி செல்வம் மாணவர்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=prm262dVnQQ

No comments:

Post a Comment