வானொலியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி !
வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தூய்மையே சேவை நிகழ்ச்சி
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் பங்கேற்கும் தூய்மையே சேவை நிகழ்ச்சிகள் இணையம் வழியாக தேவகோட்டையிலேயே ஒலிபதிவு செய்யப்பட்டது.
மதுரை வானொலியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தூய்மையே சேவை நிகழ்ச்சி ஒலிப்பதிவு தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு இணையம் வழியாக எடுத்துக்கூறினார்.
தூய்மையே சேவை நிகழ்ச்சிக்காக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி,சிந்து, வள்ளிமயில் ஆகியோர் பள்ளியிலேயே மாணவர்கள் பேசிய தகவல்களை இணையம் வழியாக குரல் பதிவு செய்து நிகழ்ச்சிகளை வானொலிக்கு அனுப்பினார்கள்.
செப்டம்பர் முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை இந்தியா முழுவதும் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி மத்திய அரசு நிறுவனங்களில் நடைபெறுகிறது. மனித வாழ்வின் மிக உயர்ந்த சேவை என்பது தூய்மை தான்.தூய்மையாக இருக்கும் ஒரு சமூகம் தான் உயர்ந்த நாகரிக வளர்ச்சி அடைந்த ஒன்று என்கிற காந்தி அடிகளின் சொற்களுக்கு ஏற்ப மாணவர்கள் ரித்திகா,நந்தனா,ஜாய் லின்சிகா , மாலினி,ஹாசினி,அஜய் , ஜெபிகா ஆகியோர் தூய்மை குறித்து பேசினார்கள். மாணவர்களின் குரல் பதிவுகள் தினம் ஒருவராக அகில இந்திய மதுரை வானொலியில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும். இப்பள்ளியின் நிகழ்ச்சிகள் இம்மாதம் 21 தேதி முதல் தொடர்ந்து காலை 7.45 மணி அளவிலும், இரவு 8.30 மணி அளவில் ஒலிபரப்பாகவுள்ளது. புதிய முறையிலான வானொலி நிகழ்ச்சி ஒலிப்பதிவு குறித்து ஏழாம் வகுப்பு மாணவி நந்தனா கூறுகையில், மதுரை வானொலியில் எங்கள் குரல் கேட்க இணையம் வழியாக முயற்சிகள் எடுத்த வானொலி நிலையத்தார்க்கும், எங்கள் பள்ளிக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.இந்த புதிய முறையிலான ஒலிப்பதிவு எங்களுக்கு மகிழ்ச்சியானதாகவே இருந்தது என்று கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் பங்கேற்கும் தூய்மையே சேவை நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு இணையம் வழியாக மதுரை வானொலியின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் எடுத்துக்கூறினார். தூய்மையே சேவை நிகழ்ச்சிக்காக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி,சிந்து, வள்ளிமயில் ஆகியோர் பள்ளியிலேயே மாணவர்கள் பேசிய தகவல்களை இணையம் வழியாக குரல் பதிவு செய்து நிகழ்ச்சிகளை வானொலிக்கு அனுப்பினார்கள்.
No comments:
Post a Comment