Tuesday, 2 September 2025

 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

                                   ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் பாண்டிசெல்வம்  பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

                            நிகழ்வில் தேவகோட்டை நகராட்சி களப்பணி உதவியாளர் ரஞ்சித்குமார் ,தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் ஜெகன் சார்லஸ், துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி   உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மாணவர்களால் நடப்பட்டது.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேவகோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் பாண்டிசெல்வம்  பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். நிகழ்வில் தேவகோட்டை நகராட்சி களப்பணி உதவியாளர் ரஞ்சித்குமார் ,தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் ஜெகன் சார்லஸ், துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி   உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர்.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மாணவர்களால் நடப்பட்டது.


வீடியோ : https://www.youtube.com/watch?v=jocDs87jqJc

No comments:

Post a Comment