ஆசிரியர் தின விழா
மருத்துவர் இல்லை என்றால் மருத்துவம் இல்லை,
வக்கீல் இல்லை என்றால் நியாயம் இல்லை,
ஆனால் ,ஆசிரியர் இல்லை என்றால் இவர்கள் யாருமே இல்லை
அசத்தலான கவிதை கூறிய மாணவி
ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டு பாடங்களை சரியாக செய்வதே ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மரியாதை
கல்லூரி முதல்வர் பேச்சு
ஆசிரியைகளுக்கு ரோஜா பூ, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறிய மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆசிரியை வள்ளிமயில் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மாணவர்களிடம் பேசுகையில், இங்கு மாணவர்கள் பேசியதில் கருவறைக்கு அம்மா, கல்வியறைக்கு ஆசிரியர் என்று கூறினார்கள்.
மருத்துவர் இல்லை என்றால் மருத்துவம் இல்லை, வக்கீல் இல்லை என்றால் நீதி கேட்டு வாதாட ஆள் இல்லை, ஆனால் ,ஆசிரியர் இல்லை என்றால் இவர்கள் யாருமே இல்லை.என்று கூறியது மிக சரியானது.
குழந்தை பிறந்து, தவழ்ந்து குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு பள்ளிக்கு வருகிறார்கள். நாம் பள்ளியில் சேரும் வரை வீட்டில் குழந்தைகள் எல்லாம் ஜாலியாக இருப்பார்கள்.
பெற்றோருடன் சேர்ந்து எல்லா விஷயத்திற்கும் போவார்கள். குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு வரும் பொழுது அழுது கொண்டுதான் வருவார்கள். குழந்தைகளின் ஜாலியாக வீட்டில் இருப்பது போன்று அவர்களால் பெற்றோருடன் செல்ல முடியாது.
மாணவர்கள் பெரும்பாலும் விடுமுறை போடாமல் பள்ளிக்கு வரவேண்டும். பள்ளியின் ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியம்.
நாம் பள்ளிக்கு வராத வரை நம்முடைய பிரச்சனைகளை நாமே தீர்க்க முடியாது. நாம் பள்ளிக்கு வந்து விட்டால் நம்முடைய பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
நம்மால் எதையும் சாதிக்க முடியும். எதுவும் கஷ்டப்படாமல் கிடைக்காது. நாம் இப்போது கஷ்டப்பட்டு படித்தால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும்.
நம் பக்கத்தில் புத்தகமும்,போனும் இருந்தால் நமக்கு போன் பார்க்கத்தான் தோணும். ஆனால் நாம் நம்முடைய படிப்பை தான் பார்க்க வேண்டும்.
நம்முடைய ஆசிரியர்கள் சொல்வதை நாம் கவனமாக கேட்க வேண்டும். ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் கொடுத்தால் அதை உடனே செய்ய வேண்டும். அதுதான் நாம் ஆசிரியர்களுக்கு மரியாதை.
நாம் நன்றாக படிப்பது தான் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தினம் அன்று நாம் கொடுக்கும் கிப்ட் ஆகும். இவ்வாறு பேசினார்.
ஆசிரியர் தினம் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பாக ஆசிரியர் தின கவிதை கூறிய மாணவிகள் நந்தனா,விஜய்கண்ணன்,ரித்திகா,ஹாஷினி,நவீன்,ஜெபிகா,ஜாய் லின்சிகா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் , ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்து அட்டை வழங்கியும், ரோஜா பூ கொடுத்தும் சிறப்பு செய்தனர்.
ஏராளமான மாணவ மாணவிகள் கவிதை மற்றும் ஓவியப் போட்டியில் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பரிசுகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=HpxYFddcHHw
No comments:
Post a Comment