Wednesday 25 January 2023

 தேசிய வாக்காளர் தின விழா 


வாக்காளர்தினத்தை திருமண விழா போன்று நடத்த வேண்டும் - மாணவி பேச்சு

வாக்காளர் தின ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றோர்க்கு பரிசு  வழங்குதல் 



















































































தேவகோட்டை-  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான  கோலப்போட்டிகளுடன் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது .இப்பள்ளியில் தொடர்ந்து பத்தாவது  ஆண்டாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

                              பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார் .தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன்  பேசுகையில், 18 வயது நிரம்பிய அனைவரும் இளம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் பெயர் இருப்பதுடன் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அண்ணன், அக்கா, அம்மா, அப்பா ஆகியோரிடம் சென்று  கட்டாயம் வாக்களிக்க சொல்லுங்கள்.என்று பேசினார்.முன்னதாக வாக்காளர் உறுதி மொழியை பாஸ்கரன்    கூற மாணவர்களும் ,ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் திரளான மாணவர்கள் ,மாணவிகள்  வாக்காளர் தின கோலப் போட்டியில் பங்கேற்றனர் .சுமார் 25-க்கும் மேற்பட்ட கோலங்கள் போடப்பட்டன.  .மாணவிகள் கனிஷ்கா, சாதனஸ்ரீ ஆகியோர் முதல்,இரண்டு இடங்களையும், மாணவர் பிரிஜித் மூன்றாம் இடத்தையும்   கோலப் போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற்றார்கள். வாக்காளர் தினம் தொடர்பாக யோகேஸ்வரன்,கனிஸ்கா,முகல்யா  ஆகியோர் கவிதையும் , திவ்யஸ்ரீ,ஜெயஸ்ரீ,லெட்சுமி  வாக்காளர் தினம் தொடர்பாக பேச்சினார்கள் . ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.நகராட்சி அலுவலர்கள் ஸ்ரீதர், துப்புரவு மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழாவில் தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். நகராட்சி அலுவலர்கள் ஸ்ரீதர், துப்புரவு மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 
வீடியோ :  
 
 
 https://www.youtube.com/watch?v=dbueW6df4ho
 
 https://www.youtube.com/watch?v=riLMMC1j3nA
 
 https://www.youtube.com/watch?v=4Y1wpUL-no4

No comments:

Post a Comment