Saturday 9 October 2021

 சத்துணவு மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்

 ஒவ்வொரு மாணவருக்கும்  பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது  




 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டைகள் வழங்கப்பட்டது.
                               கொரோனா தொற்று பரவலால்  பள்ளிகள் திறக்காத நிலையில்,  சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக  வினியோகிக்கபட்டது வருகிறது.  இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா முட்டைகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி, சமையலர் சரசு  ஆகியோர் செய்து இருந்தனர். மாணவர்கள்களின்  பெற்றோர்  சமூக இடைவெளியில் நின்று வாங்கிச் சென்றனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

ட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டைகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் வழங்கினார் இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி,சமையலர் சரசு ஆகியோர் செய்து இருந்தனர். 

 

 வீடியோ


https://www.youtube.com/watch?v=fTrS_mMEZ6s

 

 

 

No comments:

Post a Comment