Monday 4 October 2021

 உலக ரத்த தான   தினம்  

இணையவழி போட்டியில் அசத்திய பள்ளி மாணவர்கள்

 




 

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உலக ரத்த தான   தினத்தை முன்னிட்டு இணையம் வழியாக மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

                               கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறையில் இருப்பதனால் இப பள்ளி மாணவர்களுக்கு உலக ரத்ததான   தினம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வமீனாள்  ஆகியோர் இணையம் வழியாக எடுத்துக் கூறினார்கள். பள்ளி மாணவர்கள் பொதுமக்களிடையே ரத்ததானத்தின்  முக்கியத்துவத்தையும் , ரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளையும், ரத்ததானம் ஏன் செய்ய வேண்டும் என்பதை   விளக்கும் வகையில் பேசியும், ஓவியங்களாக வரைந்தும், ரத்ததான   தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.   

                                                         

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழியாக உலக ரத்ததான   தின முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். உலக ரத்ததான  தினம் தொடர்பான தகவல்களை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும்  ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துமீனாள், முத்துலட்சுமி, செல்வமீனாள்  ஆகியோர் இணையத்தின் வழியாக தெளிவாக விளக்கினார்கள். மாணவர்களும் ஓவியங்கள் வரைந்து, பாடல்கள், கவிதை, பேச்சு மூலமாக ரத்ததானத்தின்   முக்கியத்துவத்தை விளக்கினார்கள்.

 

வீடியோ 


https://www.youtube.com/watch?v=NWm30zgkxSo

https://www.youtube.com/watch?v=8guKh-8a5cc

No comments:

Post a Comment