Monday 25 October 2021

 நெதர்லாந்து நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய பள்ளி மாணவர்கள் 

 பாரதியார்  புத்தகங்கள் பரிசாக பெற்ற மாணவர்கள் 

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அஞ்சலக அதிகாரி 

 





 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு நெதர்லாந்து நாட்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

                                    சமீபத்தில் இணையம் வழியாக நெதர்லாந்து நாட்டில்  நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சியில்  இப்பள்ளியில் இருந்து 20 மாணவர்கள்  பங்கேற்றனர்.  பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் .காரைக்குடி அஞ்சல் கண்கணிப்பாளர் உசேன் அஹமது போட்டிகளில் பங்குபெற்றதற்கான சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார் .  போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்த அட்சயா மற்றும் இரண்டாம் இடம் பிடித்த தேவதர்ஷினி ஆகியோருக்கு பாரதியார் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் ஸ்ரீதர்,கருப்பையா,முத்துலெட்சுமி   ஆகியோர் செய்திருந்தனர். கொரோனா  நேரத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்பட இணையம் வழியாக போட்டிகள் நடத்திய நெதர்லாந்து நாட்டின் சூரிய தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் , மாற்றத்திற்கான விதைகள் அமைப்பிற்கும் பள்ளி சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

 

 

  படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு நெதர்லாந்து நாட்டின் சான்றிதழ்களை காரைக்குடி அஞ்சல் கண்கணிப்பாளர் உசேன் அஹமது வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் . நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் ஸ்ரீதர்,கருப்பையா,முத்துலெட்சுமி   ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

No comments:

Post a Comment