Wednesday 6 October 2021

வானொலியில் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி ! வீடு,வீடாக சென்று ஒலி பதிவு

ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவு -
அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

 

வானொலி நிலையம் செல்லாமல் புதிய முறையில் நிகழ்ச்சி ஒலிபதிவு 

 











 தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  மதுரை வானொலியில் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் இணையம் வழியாக தேவகோட்டையிலேயே ஒலிபதிவு  செய்யப்பட்டது.

                      
                                                     மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆண்டுதோறும் சென்று நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்வது வழக்கம்.ஆனால் தற்போது கொரோனா காலமாக இருப்பதால் வானொலி நிலையத்தின் புதிய முயற்சியாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துமீனாள் ,ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,கருப்பையா ஆகியோர் மாணவர்களின் வீடு,வீடாக சென்று இணையம் வழியாக குரல் பதிவு செய்து நிகழ்ச்சிகளை வானொலிக்கு அனுப்பினார்கள்.பள்ளி மாணவர்கள் முதல் வகுப்பு ஏஞ்சல் சாய் கற்கை நன்றே பாடலையும்,சபரி வர்ஷன் கதையும்,மூன்றாம் வகுப்பு சபரீஸ்வரன் புதிய தேசம் பாடலையும்,நான்காம் வகுப்பு அட்சயா பொன்மொழிகளையும், ஏழாம் வகுப்பு ஆகாஷ் ஒற்றுமையே பலம்என்ற தலைப்பில் பேச்சும்,ஹிரோஷிமா நாகசாகி குறித்து எட்டாம் வகுப்பு தேவதர்ஷினியும்,இரண்டாம் வகுப்பு ஜெயஸ்ரீ தன்னம்பிக்கை குறித்தும் இன்னும் பல மாணவர்களும் சிந்திக்கும்  விதமாக நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவி கனிஷ்கா  அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.இப்பள்ளியின் நிகழ்ச்சிகள் இம்மாதம் 21 மற்றும் 28ம் தேதிகளில் இரவு  9.00 மணி அளவில்  ஒலிபரப்பாகவுள்ளது. புதிய முறையிலான வானொலி நிகழ்ச்சி ஒலிப்பதிவு குறித்து எட்டாம் வகுப்பு மாணவி கனிகா கூறுகையில், மதுரை வானொலி நிலையத்துக்கு நேரில் சென்று இருந்தால் அனைத்து ஒலிப்பதிவு இடங்களையும் நாங்கள் நேரில் பார்த்து இருக்கலாம்.கொரனோ காரணமாக  நேரில் செல்ல இயலவில்லை.இருந்தபோதிலும் வானொலியில் எங்கள் குரல் கேட்க இணையம் வழியாக முயற்சிகள் எடுத்த வானொலி நிலையத்தார்க்கும், எங்கள் பள்ளிக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.இந்த புதிய முறையிலான ஒலிப்பதிவு எங்களுக்கு மகிழ்ச்சியானதாகவே இருந்தது என்று கூறினார்.
                          

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  மதுரை வானொலியில் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் கொரோனா காலமாக இருப்பதால் புதிய முயற்சியாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் செல்வமீனாள் ,முத்துமீனாள் ,ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,கருப்பையா ஆகியோர் மாணவர்களின் வீடு,வீடாக சென்று இணையம் வழியாக குரல் பதிவு செய்து நிகழ்ச்சிகளை வானொலிக்கு அனுப்பினார்கள். இணையம் வழியாக நிகழ்ச்சிகள் அனைத்தும் தேவகோட்டையிலேயே ஒலிபதிவு  செய்யப்பட்டது.இப்பள்ளியின் நிகழ்ச்சிகள் இம்மாதம் 21 மற்றும் 28ம் தேதிகளில் இரவு  9.00 மணி அளவில்  ஒலிபரப்பாகவுள்ளது.


 

No comments:

Post a Comment